பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி 15

நின் நிலை கண்டு யானும் வருந்துகிறேன்! எனக் கூறுதல் நம் பெண்மைக்கு ஏலாது. ஆதலின், யானும் என் அன்பை அவன்பால் காட்டினேனல்லள். ஆனால், எனக்கு அவன்பால் அன்பு உண்டு என்பதை அறியாமையால், அவன் இறந்து விடுதலும் கூடும் என்று அஞ்சினேன். மேலும், அவன்பால் யான் கொண்ட அன்பு தோள் மெலிந்து போமாறு கவலையை அளித்து என்னையும் வாட்டி வருத்திற்று. அதனால், இந்நிலை மேலும் நீடிப்பின், இருவர்க்கும் கேடாம் என்பதை உணர்ந்தேன். அவ்வுணர்ச்சி என் பெண்மையை வென்றது. நாணை மறந்தேன்; அதனால், துணிந்து ஒன்று செய்துவிட்டேன். ஒரு நாள் நம் தினைப் புனத்தை அடுத்து அமைத்திருந்த ஊசலில் அமர்ந்து ஆடிக் கொண்டிருந்தேன். அப்போது, அவ்விளைஞன் ஆங்கு வந்தான்். வந்த அவனை, ஐய! இவ்வூசலைச் சிறிது ஆட்டுக!' என்றேன். அதை எதிர்நோக்கி யிருந்தவன்போல் அவன், தையால்! நீ விரும்பியவாறே விரைந்து ஆட்டுவேன்! எனக் கூறிக் கொண்டே, வந்து ஆட்டத் தொடங்கினான். அவ்வாறு அவன் ஆட்ட, ஆடிக் கொண்டிருந்த நான், திடுமெனக் கைநழுவி வீழ்வாளைப்போல் அவன்மீது வீழ்ந்து விட்டேன். (உண்மையில் கை நழுவவில்லை; பொய்யாக நடித்தேன்) ஆனால், (அது நடிப்பு என்பதை உணராத) அவன், என்னை விரைந்து தூக்கித் தன் மார்பில் அனைத்துக் கொண்டான். அந்நிலையில் இன்பங்கண்ட நான், கண் விழித்துக் கொள்ளின், பண்பாடு மிக்க பெருந் தகையாய அவன், என்னை விடுத்து, வீடு செல்க! எனக் கூறிப் போக விடுவன் என்ற அச்சத்தால், மெய்ம் மறந்து