பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 புலவர் கா. கோவிந்தன்

கிடப்பாள்போல் நெடிது கிடந்தேன்; என்னே என் செயல்!” என்று கூறினாள்.

அவ்வாறு கூறுவாள் வறிதே கூறினாளல்லள்; கூறிக் கொண்டே, தான்் கூறக்கூற, அதைக் கேட்கும் அப்பெண் னின் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சி அலைகளை, அவள் முகக் குறிப்பால் கண்டு கொண்டே வந்தாள். இளைஞன் வருவதையும், அவன்பால் தான்் அன்பு கொண்டதையும் கூறியக்கால், இப்புனம் நோக்கி வருபவன் நம் காதலன் ஒருவனேயன்றோ? அவனை இவள் கண்டு விட்டனளே! என்ற நினைவால் அச்சம் கொண்டாள். அவ்விளைஞன் என்பால் கொண்ட அன்பு காரணமாக வருவதை அறியாமல், இவள் அவன் பால் அன்பு காட்டத் தொடங்கிவிட்டனளே! என்னே இவள் அறியாமை : என்ற எண்ணத்தால், அவள்பால் இரக்கம் கொண்டாள். என்னைப் பெறப் பேராவல் காட்டித் துடிக்கும் அவ்விளைஞன், அதற்குத் துணை செய்ய வல்ல என் தோழியிடத்தும் தன் குறைகூற நானுகின்றனனே; என்னே அவன் பெருமை !' என்ற எண்ணத்தால் பெருமிதம் கொண்டாள். ஆனால், அவ்வுணர்வு உடனே மாய்ந்து விட்டது. அவன்பால் யானும் அன்புகொண்டு விட்டேன்! எனத் தோழி உரைப்பக் கேட்டு, இவ்வாறும் ஆமோ ! அவளும் என்னைப்போல் ஒரு பெண்; அவளுக்கும் காதல் உள்ளம் உண்டு; அதனால், அவள் காதல் கொள்வதில் வியப்பில்லை. ஆனால், என் காதலனை அன்றோ அவளும் காதலிக்கத் தொடங்கி விட்டாள்; என்னே இந்நிலை! என்று எண்ணினாள். அச்சம் அவளை மீண்டும் பற்றிக் கொண்டது. ஆனால்,