பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ஒ 17

அது நெடிது நிற்கவில்லை. தோழி கூறிய ஊசல் நிகழ்ச்சியால் அவ்வச்ச நிலை மாறிவிட்டது. என் தோழி, என்னைப் போன்றே, பெண்மைக் குணங்களைப் பெருகக் கொண்டவள்; அவள் தன் பெண்மை விட்டு, முன்பின் அறியாத ஒர் ஆண்மகன்பால் அவ்வாறு நடந்து கொள்ளாள். இளைஞன் ஒருவன் வந்து தன்னைக் கண்டு செல்வதைக் கூறியவரை உண்மையே உரைத்தவள், ஊசல் நிகழ்ச்சியை வேண்டுமென்று, தான்ே படைத்துக் கூறியுள்ளாள்; அது அவள் கட்டிவிட்ட கதையே அன்றி, உண்மை அன்று. என் களவு ஒழுக்கத்தினை அவள் உணர்ந்து விட்டாள்; அதை அவள்பால் நான் உரைத்தி லேன் என்றதால் விளைந்த சிறு விளையாட்டே இது! என்ற தெளிவு அவ்வச்சத்தைப் போக்கிவிட்டு அமைதி யைத் தந்தது; அதனால், என் காதல் ஒழுக்கத்தினை நான் கூறாமலே அறிந்து கொண்டனையே! என்னே நின் அறிவு! என்னே என் நல்வினை! என்ற அவள் எண்ணத்தை உணர்த்தவல்ல, வியப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே கொண்ட சிறு புன்முறுவல் அவள் கடைவாயில் காட்சி யளித்தது.

இவ்வாறு, தான்் கூறிய கூற்றின் வழியே, அப் பெண்ணின் காதல் ஒழுக்கத்தினை உறுதியாகக் கொண் டாள் தோழி. தோழி கூறிய அக் கூற்றையே துணையாகக் கொண்டு, தன் காதல் ஒழுக்கத்தினை அவள் உணர்ந்து கொண்டாள் என அறிந்து மகிழ்ந்தாள் அப் பெண். பெண்ணுள்ளத்தின் பெருமைதான்் என்னே!

தோழி கூறிய ஊசல் நிகழ்ச்சி பொய்யேயாயினும், அது, அப் பெண்ணின் உள்ளத்தை உணரத் துணை புரிந்தது. ஆதலின் அப்பொய் பழிக்கப் பெறாது, பொருட்

குறிஞ்சி-2