பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஆ புலவர் கா. கோவிந்தன்

செறிவுடையது எனப் போற்றப்படுவதாயிற்று. புரைதிர்ந்த நன்மை பயக்கும் என்றால், பொய்ம்மையும் வாய்மை பிடத்த என்றன்றோ கூறியுள்ளார் வள்ளுவப் பெருந்தகை யார். குறிஞ்சி நிலத்துப் பழந்தமிழ்ப் பெண்களின் உள்ளப் பெருமையை உணர்த்தும் அந்தப் பாட்டு இது:

கயமலர் உண்கண்ணாய் ! காணாய்; ஒருவன் வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட கண்ணியன், வில்லன் வரும்; என்னை நோக்குபு, முன்னத்திற் காட்டுதல் அல்லது, தான்் உற்ற நோய் உரைக்கல்லான், பெயரும்மன் பன்னாளும்! 5

பாயல்பெறேன், படர்கூர்ந்து, அவன்வயின் சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக் கண்நின்று கூறுதல் ஆற்றான் அவனாயின்; பெண்அன்று உரைத்தல் நமக்காயின்; இன்னது உம் காணான், கழிதலும் உண்டு என்று, ஒருநாள் என் 10

தோள் நெகிழ்புற்ற துயரால் துணிந்துஓர் நாண்இன்மை செய்தேன்; நறுநுதால்! ஏனல் இனக்கிளி யாம் கடிந்து ஒம்பும் புனத்து இயல் ஊசல் ஊர்ந்து ஆட, ஒருஞான்று வந்தான்ை 'ஐய! சிறிது என்னை ஊக்கி எனக்கூறத் 15

"தையால்! நன்று, என்று அவன் ஊக்க, கைநெகிழ்பு, பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பில் வாயாச்செத்து. ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல்; மெய்யறியா தேன்போல் கிடந்தேன்மன்; ஆயிடை மெய்யறிந்து ஏற்றெழுவேனாயின், ஒய்யென ... . 20