பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 19

'ஒண்குழாய்! செல்க, எனக்கூறி விடும்பண்பின் அங்கண் உடையன் அவன்.”

தலைவியின் இயல்பிலும் செயலிலும் புதுமை கண்ட தோழி, அவள் இயற்கைப் புணர்ச்சி பெற்றுளாள் என்பதை உணர்ந்து, அவள் அதைத் தன்னை மறைத்தும் பயன் இல்லை; அது தனக்கும் தெரியும் என்பதை மெய்யும் பொய்யும் கலந்த சொற்களால், அவளோடு சொல்லாடி அறிவித்தல் என்ற துறையமைய வந்துள்ளது இச் செய்யுள்.

1. கயம்-குளம், 2. வயம்-வலிமை; தொடை-மாண்ட, மாண் புறத் தொடுக்கப்பெற்ற, 3. நோக்குபு-நோக்கி, 4. முன்னம்-குறிப்பு: 5. உரைக்கல்லான்-உரையான், 6. படர்-துன்பம்; 10. கழிதல்இறத்தல்; 12. ஏனல்-தினைப்புனம், 14 ஒருஞான்று-ஒருநாள்; 15. ஊக்கி-ஆட்டு, 16. நெகிழ்பு-நழுவி, 17. வாய்-உண்மை, செத்துகருதி, வாயாச்செத்து-உண்மையாகக் கருதி. 18. ஒய்யென-விரை வாக, 20. ஏற்று-மயக்கம்தெளிந்து, அங்கண்-அருள் அல்லது நாகரிகம். -