பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

‘நன்மலை நாட, கேள்!

மலைச் சாரலைச் சார்ந்த ஒரு சிற்றுார். அச்சிற்றுாரில் உள்ள வீடுகள் பலவற்றுள்ளும் சிறந்து விளங்கிய ஒரு வீட்டைச் சுற்றி அமைந்துள்ளது ஒரு வேலி. அவ்வேலியின் ஒருபால் நின்று கொண்டுள்ளாள் ஒரு பெண். அவள், அவ்வீட்டிற்குரியவளாகிய ஒரு பெண்ணின் உயிர்த் தோழி. அவள் யாரையோ எதிர்நோக்கி ஆங்கு நின்று கொண்டுள்ளாள். அந்நிலை யில் ஆண்டு வந்து சேர்ந்தான்் அழகிய ஒர் இளைஞன்.

அவன் அந்த வீட்டில் வாழும் பெண்ணின்பால் பேரன்புடையவன்; அவள் ஊரை அடுத்துள்ள ஊரில் வாழ்பவன். அவள் தினைப் புனத்தில் காவல் புரிந்திருந்த போது, கண்டு காதல் கொண்டவன். அக்காதல் ஒழுக்கம் தோழி ஒருத்திக்கே தெரியும்; பெண்ணைப் பெற்றோர் அதை அறியார். அவள் ஆண்டுக் காவல் புரிந்திருக்குங் கால், நாள்தோறும் தவறாது வந்து, சிறிது நேரம்