பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 21

அளவளாவிச் சென்று வந்தான்். அந்நல்வாய்ப்பு நெடிது நாள் நிற்கவில்லை. கொல்லையில் தினைக்கதிர்கள் முற்றி விட்டமையால், பெற்றோர் தம் பெண்ணை வீட்டிற்குக் கொண்டு சென்று விட்டனர். தினைப்புனத்தில் இருக்குங் கால், அவளை எளிதிற் கண்டு மகிழ்ந்ததுபோல், இப்போது கண்டு மகிழ்தல் இயலாது போயிற்று. அதனால் அவளைக் காண விரும்பும் அவன், அவள் பெற்றோர் அறியாவாறு இரவில் வந்து தோழியின் துணையால் அவளைக் கண்டு மகிழ்ந்து செல்லத் தொடங்கினான்.

அந்தப் பெண், அவன்மீது பேரன்பு கொண்டிருந் தாள். அவனை ஒரு சிறிது பிரியினும் பெருந்துயர் கொள்வள். ஒரு நாள் காணாளாயினும் அவள் கவலை மிகும். அதனால் அவள் உடல் தளரும். வளை கழலத் தொடங்கி விடும். அத் தளர்ச்சி, அயலார்க்கு அவள் ஒழுக்கத்தின்பால் ஐயம் கொள்ளச் செய்யும் தூண்டு கோலாம். பலர் பலவாறு உரைக்கத் தொடங்கி விடுவர். அவர் அலர் உரையால் உண்டாம் துன்பம், அவனைக் காணாமையாலாகும் துயரினும் பெரிதாம். அதனால், அவன் தவறாது வருதலை, நாள்தோறும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி யிருப்பாள். ஆனால், அவ்வாறு அவன் வருகையை நாள்தோறும் விரும்பி நிற்கும் அவள், அவன் வரும் வழியையும், அவ்வழியில் அவன் வரும் காலத்தை யும் எண்ணி விடினோ, அவன் வாராமை கண்டு வருந்து வதினும் பெரிதும் வருந்துவள். அந்நிலையில், அவன் வாராமையே நன்று என்று எண்ணும் அவள் உள்ளம்.

அவன், அவளுருக்கு வரவேண்டின், இடை வழியில் காடுகளையும், மலைகளையும் கடந்தே வருதல் வேண்டும்.