பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 புலவர் கா. கோவிந்தன்

- தன்னையோ, தன் காதலையோ பொருட்படுத்தாது சென்ற அவள் செயல் கண்டு, வெறுத்த உள்ளத்தனாய், "நின் பேரழகைக் காட்டி என்னைக் காதற் கடுந்துயர்க்கு உள்ளாக்கிச் செல்லும் நின்மீதும் குற்றம் இல்லை. இவ்வளவு பேரழகு உடைய உன்னைப் புறம்போக விடாது, வீட்டினுள்ளேயே வைத்துக் காவாது, என் போல்வார் கண்டு, காதல் கொண்டு வருந்துமாறு, ஊர் திரிய விட்ட நின் பெற்றோர்மீதும் குற்றம் இல்லை. 'கண்டார் உயிரைக் கொள்ளை கொள்ளும் இவள் போலும் பேரழகுடைய பெண்கள், புறஞ்செல்ல வேண்டின், கட்டுத்தறியை முறித்து, கானும் பொருள் களை அழித்துத் திரியும் கொடிய யானையை வெளியே கொண்டு செல்ல வேண்டின், "மதமிக்க யானை வருகிறது. மக்காள்! ஒடி ஒதுக்கிடம் தேடிக்கொள்ளுங்கள்!” எனப் புறப்படு முன்னர் பறையறைந்து அறிவித்துப் பின்னர் விடுத்தல்போல், “கண்டாரை மயக்கும் கட்டழகி வருகிறாள். காளைகாள்! காணா இடந்தேடிக் கண்மூடி ஒதுங்குங்கள்!" எனப் பறையறைந்து அறிவித்த பின்னரே, வெளிச் செல்லுதல் வேண்டும் என ஆணையிடா இந்நாட்டு அரசனே குற்றம் உடையனாவன். ஆகவே, நின்னையோ, நின் தமரையோ நோகேன். இந்நாட்டு அரசனையே நோவேன்!” எனக் கூறி உளம் குன்றினான்,

இளைஞன் காதற் கடுந்துயர் காரணமாய் வந்த சொற்களைச் சுவைமிக்க கோவையாக்கிக் கொடுக்கிறது

இப்பாட்டு.

"ஊர்க்கால் நிவந்த பொதும்பருள், நீர்க்கால் கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு