பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இச் 169

கழும முடித்துக் கண்கூடு கூழை சுவல்மிசைத் தாதொடு தாழ, அகல்மதி தீங்கதிர் விட்டதுபோல முகன் அமர்ந்து, 5 ஈங்கே வருவாள் இவள் யார்கொல்? ஆங்கே ஓர் வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார் - உறுப்பெலாங் கொண்டியற்றி யாள் கொல்? வெறுப்பினால் வேண்டுருவம் கொண்டதோர் கூற்றம் கொல்? ஆண்டார். கடிது. இவளைக் காவார் விடுதல்; கொடிஇயல், 10

பல்கலைச், சில்பூங் கலிங்கத்தள்; ஈங்குஇதோர் நல்கூர்ந்தார் செல்வ மகள்; இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து; நல்லாய் ! கேள்: ஆய்துவி அனம்என, அணிமயில் பெடை எனத் 15

தூதுணம் புறவு எனத் துதைந்த நின்எழில் நலம், மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய்! நிற்கண்டார்ப் பேதுறுஉம் என்பதை அறிதியோ? அறியாயோ? நுணங்குஅமைத் திரள்ளன, நுண்இழை அணைஎன, முழுங்குநீர்ப் புணைஎன அமைந்தநின் தடமென்தோள், 20

வணங்கு இறை வால்எயிற்று அம்நல்லாய்! நிற்

கண்டார்க்கு அணங்கு ஆகும் என்பதை அறிதியே? அறியாயோ? முதிர் கோங்கின் முகைஎன, முகம்செய்த குரும்பை எனப் பெயல்துளி முகிழ் எனப் பெருத்தநின் இளமுலை மயிர் வார்ந்த வரிமுன்கை மடநல்லாய்! நிற்கண்டார் 25

உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ?

எனவாங்கு,