பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 இ. புலவர் கா. கோவிந்தன்

பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய். யாதொன்றும் வாய்வாளாது இறந்து ஈவாய் ! கேள் இனி ! நீயும் தவறிலை; நின்னைப் புறங்கடைப் - 30 போதர விட்ட நுமரும் தவறிலர்; 'நிறைஅழி, கொல்யானை நீர்க்கு விட்டாங்குப் பறை அறைந்தல்லது செல்லற்க என்னா இறையே தவறுடையான்.'

இது கைக்கிளை - இதற்கு விதி; தொல், பொருள் 50

1 நிவந்த-வளர்ந்த, பொதும்பர்-சோலை; 2. ஞாழல்-புலி நகக் கொன்றை எனும் மரம்; இணர்-கொத்து; 3. கழுமஒன்றோடொன்று மயங்க, கூழை-கூந்தல்; 4. சுவல்-தோள்; 7. பாவை-கொல்லிப் பாவை; 11. பல்கலை-எண்கோவை மேகலை, கலிங்கம்-ஆடை, 13. தகைத்து-தடுத்து; 15. தூவி-தோகை; அனம்-அன்னம்; 16. தூது-கல்; தூதுணம்-கல்லை உணவாகக் கொண்ட துதைந்த-மிகப்பெற்ற; 17. மாதர்-காதல்; 18. பேதுறு உம்-மயங்கச் செய்யும்; 19. நுணங்கு-நுண்ணிய, அமை-மூங்கில்; 20. புணை-தெப்பம்; 21. வணங்கு இறை-வளைந்த முன்கை, 22. அணங்கு-வருத்தம்; 23. முகை-அரும்பு; குரும்பை-தேங்காய்ப் பிஞ்சு 24. முகிழ்-மொக்குள் இறந்து ஈவாய்-கடந்து செல்கின்ற வளே; 31. போதரவிட்ட-போகவிட்ட 32. நிறைஅழி - மதத்தால் அறிவு இழந்த. -