பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

அகன்றாள் அவள்

பாண்டி நாட்டில், பொதிய மலையை அடுத்த ஒரு சிற்றுார். அச்சிற்றுாரின் மிகப் பழைய குடிகளில் பிறந்த பெருமையோடு, செல்வ வளமும் சிறக்கப் பெற்ற ஒருவன், வானளாவ உயர்ந்து, அவ்வுயர்ச்சிக்கேற்ப அகன்ற பெரு மனையில் வாழ்ந்திருந்தான்். அவனுக்கு அழகே உருவாய் வந்த ஒரு மகள் இருந்தாள். அவள் தோள்கள் மூங்கில் போல் திரண்டிருக்கும். ஐவகையாகப் பிரித்துப் பின்னப் பெற்ற அவள் கூந்தல் பெருமணம் வீசும். விழி மான் விழியை நிகர்க்கும். அழகிய மயிலின் சாயல், அவள் சாயல். இத்தகைய பேரழகு உடையாள், ஒருநாள், தன் காலிற் கட்டிய சிலம்பு ஒலிக்க, அணிந்த அணிகள் மின்னி ஒளிவிட, ஆடும் பந்தோடு வெளியே ஓடிவந்து ஆடத் தொடங்கினாள்.

இயற்கை அழகும், செயற்கை நலனும் ஒருங்கே கொண்டு, ஆடி மகிழும் அவளைக் கண்டான் ஒர்