பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இ புலவர் கா. கோவிந்தன்

இளைஞன். அவள் அழகு உள்ளத்தைக் கவர, அவன் அவள் மீது காதல் கொண்டான். அசைவால் கொடி எனவும், ஒளியால் மின் எனவும், கண்டார் கருத்தை ஈர்த்துக் கொடுமை செய்தலின் அணங்கு எனவும் தோன்றும் அவள் அழகு கண்டு தன் அறிவிழந்தான்். அறிவிழந்த அவன், தக்க இன்ன, தகாதன இன்ன என்பதை அறியானாகி, ஆடும் அவள் அருகிற் சென்றான்.

சென்று, நிறத்தாலும், மணத்தாலும் வேறுபட்ட பற்பல மலர் கொண்டு தொடுத்த இனிய மாலையுடை யான், தன் பொதிகை மலையில் தோன்றியது எனும் மாண்புடைய சந்தனம் பூசிய மார்புடையான், மழையென வாரி வழங்கும் வண்மையுடையான், உயர்ந்த உச்சிகளைக் கொண்ட பொதிய மலையுடையான் எனத் தான்் வாழும் பாண்டி நாடாளும் பெரியோனை முன்னர் வாழ்த்தி னான். பின்னர், மாவின் இளந்தளிர் நிறத்தினை வென்ற அவள் மேனி அழகையும், அம்மேனியின் இடையிடையே, வேங்கை மலர் நிறங்கொண்டு மாண்புறத் தோன்றும் தேமல் அழகையும் கண்டு பாராட்டினான்.

முடிவாக, அவளை நோக்கி, "அழகே உருவாய் வந்த ஆரணங்கே! பாண்டியன் தலைநகராம் கூடன்மாநகரை அடுத்த திருப்பரங்குன்றில், தேன் சிதறிப் பாயுமாறு மலர்கின்ற கருநீல மலரை வென்ற நின்கண்கள், யானைப் படையுடைமையால் செருக்கித் தன்னைப் பகைத்து வந்த பகைவர் உடலிற் பாய்ந்து, அவர் இரத்தக் கறை படிந்து செந்நிறம் பெற்றுத் தோன்றும் அப்பாண்டியன் வேற் படையைக் காட்டிலும் சிவந்து, என்னைக் கொல்லும் கொடுமை வாய்ந்து தோன்றல் நினக்கு ஏற்புடைத்தோ?