பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி 173

பந்தியில் வரிசை வரிசையாக நிற்கும் பெரிய குதிரைப் படை உடைமையால் பகைத்து வந்தாரின் மார்பில் பாய்ந்து, ஊடுருவிச் சென்ற அப் பாண்டியன் கை அம்பைப் போல், நின் கண்கள் என் உள்ளத்தில் பாய்ந்து, உறுநோய் விளைத்தல், கொடுமையிற் கொடிய கொடுமையாமன்றோ? ஆரம் கிடந்து அணி செய்யும் நின் இள முலைகள், மதம் மிக்கு வலிபெற்ற, பாண்டியன் படை யானையின் கோடுகளைக் காட்டிலும் கொடுமை உடையவாதல் நினக்குப் பொருந்துமோ?” என, அவள் பேரழகால் தான்் படும் துயரத்தை அவள் உளம் புகுமாறு எடுத்துரைத்தான்்.

அவன் அருகிருந்து அவ்வளவும் கூற, அப்பெண், தலை கவிழ்ந்து நிலம் நோக்கி நின்று, அவன் கூறியனவெல் லாம் கேட்டிருந்து, பின்னர், யாதோ ஒன்றை நினைத்துக் கொண்டாள்போல், தன் விளையாடும் தோழியரைக் காணும் ஆவல் மிக்கவளாய், அவ்விடம் நீங்கி ஓடிவிட் டாள். ஒடியவள்பால் தன் அறிவைப் பறிகொடுத்துவிட்ட அவ்விளைஞன், மெல்ல அவ்விடத்தை விட்டகன்று தன் ஊர் மீண்டான். தன் நண்பனை அடுத்து, ஆங்கு உற்ற தெல்லாம் உரைத்து, அப் பெண்ணின்பால் தான்் கொண்ட காதல் நிறைவேற, அவன் துணை வேண்டினான்.

வேய்எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால்; மாவென்ற மடநோக்கின், மயில்இயல், தளர்பு ஒல்கி, ஆய்சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர்ஒளி இழை இமைப்பக், கொடி என, மின்ளன, அணங்குளன, யாதொன்றும் தெரிகல்லா இடையின்கண் கண்கவர்பு ஒருங்கோட, 5