பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ஆ 185

அந்நிலையில், அப்பெண்ணைக் கண்ட அவன், அவளைப் பின்தொடர்ந்து சென்றான். தன் ஆடிடம் அடைந்தாள் அவள். அவளோடு ஆடும் அவ்வூர்ப் பெண்கள், ஆங்கு, அதுகாறும் வந்திலர். அதனால், அவள், அவரை எதிர் நோக்கிச் சிறிது நேரம் தனித்திருந்தாள். அத் தனிமையைப் பயன்கொண்டு அவளைக்கண்டு, தன் காதல் உள்ளத்தைத் திறந்து காட்டிவிடுவது எனத் துணிந்தான்். விரைந்து அவளை அணுகினான். அவள் கையழகு, அக்கைவளை, காற்சிலம்பு, தலையணி முதலாம் சிறப்புக்களைப் பாராட்டினான். பின்னர்ப், "பெண்ணே ! நின்பாற் கொண்ட அன்பால், யான் இதுகாறும் பேணிக் காத்துவந்த என் அறிவு, ஆண்மை, ஒழுக்கம், உயர்குணம் ஆகியவெல்லாம், என்னைக் கைவிட்டு எங்கோ சென்று விட்டன. செய்வதறியாது, சித்தம் கலங்கிச் சீரழிகின்றேன். நின் அழகால், என்னை இவ்வாறு ஆட்டி அலைக் கழிக்கும் நீ, அதைச் சிறிதும் அறிந்திலை. என்னை நோக்கு வதும் செய்யாது செல்கின்றனை; இவ்வாறு புறக்கணித்தல் நினக்குப் பொருந்தாது. உள்ளம் கலங்கி, உடல்நலம் கெட்டு, யான் வருந்த நிலைகெட்டுத் திரியும் என் நிலை கண்ட இவ்வூரார், "இவள் பொருட்டு இவன் இவ்வாறு வருந்தவும், இவனைப் பற்றி வருத்தும் நோய் யாது? அந் நோய்வரக் காரணம் என்ன ? என்பதை அறிந்து கொள்ளும் அருள்உள்ளமும் இவட்கு இல்லையே!” என உன்னைப் பழி தூற்றுவதை நீ அறிந்திலையோ? இவ்வாறு உன் பொருட்டு யான் துயர்உற, அதை அறிந்து, அத்துயர் போக்கத் துடிக்கும் அருள் உள்ளம் அற்ற நீ, எதிர்கால வாழ்வில், நின்நிலை உயர்தற் பொருட்டுத், தைந்நீராடல்,