பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ஆ. புலவர் கா. கோவிந்தன்

தவம் மேற்கொள்ளுதல், பாவைத் திருமணம் முதலாம் நோன்புகளை மேற்கொள்வதால் மட்டும் அப்பயனைப் பெற்றுவிடுதல் இயலுமோ? அருள் உள்ளம் இல்லார்க்கு அவர் செய்யும் நோன்புகள் பயன்தாரா என்பதை நீ அறியாய்கொல் ? அது மட்டுமன்று, நின்பொருட்டு வருந்தும் என்நிலை கண்டு இரங்காக் கொடுமையால் நினக்கு உண்டாம்கேடு, நின்னைப் பற்றாதுவிடாது; இதை நீ உணர்தல் வேண்டும்,” என்று கூறினான். அந்நிலையில் அவள் தோழியர் அவண் வந்து விடவே, மேற்கொண்டு எதுவும் கூற மாட்டாது மீண்டான். -

அவன், ஆங்கு அவளுக்குக் கூறிய அக்காதலுரை களை அழகாகக் கூறுகிறது இச்செய்யுள்: '

"தளைநெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை, முளைநிமிர்த்தவை போலும் முத்துக்கோல் அவிர்தொடி’ அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண்ஏர்தண் ஏர்உருவின், துடுப்பெனப் புரையும் நின் திரண்டநேர் அரிமுன்கைச்

சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும் 5 விளையாட அரிப்பெய்த அழகு.அமை புனைவினை ஆய்சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அஞ்சில இயலும்நின் பின்னுவிட்டு இருளிய ஐம்பால் கண்டு என்பால் என்னைவிட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி;

மருளி, யான் மருளுற "இவன் உற்றது எவன்? என்னும்

10 "அருள் இலை இவட்கு" என அயலார் நிற்பழிக்குங்கால், வைஎயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ, தையில் நீராடிய தவம் தலைப் படுவாயோ?