பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

நாண் நினைந்து கைவிடேல்

உருவாலும் திருவாலும் அறிவாலும் ஆண்டாலும் ஒத்த வுயர்வுடையராய் ஓர் இளைஞனும் ஒரு பெண்ணும், ஒருவரையொருவர் கண்டு காதலித்தனர். அன்றுவரை அவர் ஒருவரையொருவர் அறிந்திலராயினும், கண்ட அந்நாழியே, அவர் இருவர் உள்ளமும் ஒன்றுபட்டு விட்டன; அன்று எவரும் காணாவாறு தனித்திருந்து கண்டு காதல் கொண்டது எவ்வாறோ வாய்த்துவிட்ட தாயினும், என்றும், அன்று போலவே தனித்துவந்து க்ண்டு மகிழ்தல் அவர்க்கு இயலாது. உலகியல் அறிவும், உள்ளத் தூய்மையும் வாய்ந்த ஒருத்தி, அப்பெண்ணின் தோழியாய் உள்ளாள். அத்தோழி, அவளை அவள் நிழல்போல் ஒரு சிறிதும் பிரியாதிருந்து பேணிக்காத்து வந்தாள். அதனால் அவள் அறியாவாறு, அப்பெண், தன் காதலனைக் கண்டு மகிழ்தல் இயலாது. ஆகவே, அதற்கு அவள் துணை இன்றி யாமையாததாயிற்று. இவ்வுண்மை உணர்ந்த அப்பெண், அவ்விளைஞன்பால், "இனி வருங்கால், அத்தோழியின்