பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#90 ↔ புலவர் கா. கோவிந்தன்

துணை பெற்று வருக!” எனக் குறிப்பாகக் கூறி அனுப்பினாள்.

மறுநாள், அப்பெண்ணிருக்கும் இடந்தேடி வந்த அவ்விளைஞன், ஆங்கு ஒருபால், அத்தோழி தனித்திருக்கக் கண்டான். கண்டு அவள்பால் சென்று, அப் பெண்ணைத் தான்் கண்டது, காதல் கொண்டது, அவளும் தன் காதலை ஏற்றுக் கொண்டது ஆகிய நிகழ்ச்சிகளை விளங்கக் கூறித் தங்கள் காதல் வாழ்வு விளங்க அவள் துணை வேண்டி நின்றான். சின்னாட்களாகவே, அப்பெண்ணின் தோற்றத்திலும் செயலிலும் புதுமை நிகழக்கண்டு, அவள் உள்ளத்தில் காதல் உணர்வு அரும்பியுள்ளதைக் குறிப்பால் அறிந்திருந்தாள் அத்தோழி. "அப்பெண்ணின் மார்புதேமல் படர்ந்து பேரழகு செய்தது. நெற்றி காதல் மணம் கமழ்ந்தது. கூந்தலில் ஒரு புது மணம் புலனாயிற்று. அதன் தோற்றத்திலும் ஒரு தனிச் சிறப்புக் காணப்பட்டது. துணுகி நோக்கினார்க்கே புலனாம் பேரழகும், மென்மையும் பெற்றது அவள் இடை, வளையல் விளங்கும் அவள் முன்கைகள். அழகாக வளைந்து, வரி பல பெற்று வனப்புடைய வாயின. அவள்பால் காணலாம் இவை போலும் தோற்ற நாற்றங்களின் புதுமையால், அவள் ஒழுக்கத்தை ஒர் அளவு உணர்ந்திருந்த தோழி, இளைஞன் கூறியன கொண்டு அதை உறுதியாக்கிக் கொண்டாள். இளைஞன் காதலிப்பது அவளையே என்பதை அறிந்து, அவர் காதல் வளரத் துணை புரிவதாக அவனுக்கு வாக்களித்து அனுப்பினாள். . . . . .