பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி 191

இளைஞனுக்கு வாக்களித்த தோழி, சென்று அப் பெண்ணைக் கண்டாள். காதல் ஒழுக்கம் உண்மையால், பண்டினும் பேரழகு தோன்ற நிற்கும் அவள் தோற்றப் பொலிவைக் கண்டு பாராட்டினாள். அவ்வாறு பாராட்டிய தன் பாராட்டுரை கண்டு, "நம் காதல் ஒழுக்கத்தைத் தோழி அறிந்துவிட்டாள். ஆகவே, அதை அவளுக்கு மறைப்பது இனியும் ஆகாது!" என உணர்ந்து, அதை அவளாகவே முன்வந்து அறிவிப்பள் என எதிர் பார்த்தாள். ஆனால், அவள் ஏதும் அறியாதாள்போல் நடந்து கொண்டாள். அதனால், "உடன் பழகும் உயிர்த் தோழியாய என்னையே ஏமாற்றப் பார்க்கின்றனளே!” என்ற எண்ணம் எழவே, தோழிக்குச் சிறுசினம் உண்டாயிற்று. அதனால், அவள் காதலையும், காதலனை யும் தான்் கண்டு கொண்டதை அவள்பால் அறிவித்திலள். அறிவியாதே, அப்பெண்ணைப் பார்த்துத் "தோழி! நம் தெருவில் எவனோ ஒர் இளைஞன் நிற்கின்றான். தோற்றத் தால், பெரிய போர் யானை போன்ற அவன், யாது காரணத்தாலோ, அவ்வாண்மையிழந்து, உள்ளத்தே உறு துயர் கொண்டு உருகுவான்போல் உள்ளான். அவன், அவ்வழிவந்த என்னைக் கண்டவுடனே, விரைந்து வந்து என்னைத் தொழுதான்். தொழுது, காண்பார் கண்ணிற்கு விருந்தளிக்கும் கவின்மிக்க மகளிர், தன்னைக் கண்ட அவ்வாடவர் உள்ளத்தில் காதல் நோய் தோற்றி, அளவின்றிப் பெருக்கி, அவர் உயிரை விரைந்து கொள்ளை கொள்ளும் வண்ணம் பெருந்துயர் விளைத்துவிட்டுப் பின்னர் மறந்து வாழ்தல் பெண்மைக்குப் பொருந்தாது, எனக் கூறிக் கண்ணிர்