பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ல் புலவர் கா. கோவிந்தன்

விட்டுக் கலங்கினான். எவனோ ஒருவன், நம்மிடத்தே வந்து என்ன காரியம் செய்து விட்டான்? அவன் ஈங்கு வந்து அவ்வாறு கலங்கக் காரணம் என்னையோ? அதை நீ அறிவைகொல்?” என்று மட்டும் கூறி வைத்தாள்.

அது கேட்ட அப்பெண், அப்பொழுதும் தான்் காதல் கொண்டதைக் காட்டிக் கொள்ளாதே, "தோழி! தெருவில் எவனெவனோ கிடந்து கலங்குவன். அவன் கலக்கத்திற்காம் காரணம் எவ்வளவோ இருக்கும். அவன் கலக்கத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு? காரணம் இன்றி, நம் தெருவில் நின்று, கலங்குவானைக் கண்டு, நீ கலங்குவது ஏன்? உன்னோடு தொடர்பில்லாதனவற்றை யெல்லாம், உன்மேல் ஏறட்டுக் கொண்டு ஏன் வருந்து கின்றனை? பிறர் படும் துயரத்தைத் தம் துயரமாகக் கொள்வது, வாரணவாசியில் வாழும் வடவர் வழக்க மன்றோ? அதை நீ மேற்கொண்டு, தெருவிற்கிடந்து கலங்கு வான் கலக்கம் கண்டு கலங்கும் நின் செய்கையால், நமக்கு என்ன கேடு வந்துறுமோ? எனக் கூறி வெறுத்தாள் போல் நடித்தாள்.

அவள் அவ்வாறு கூறக்கேட்ட தோழி, தான்் அவள் காதலனைக் கண்டு வந்து, அவன் கலக்க நிலையைக் கூறிய பின்னரும், தன் காதல் ஒழுக்கத்தை ஒப்புக் கொள்ளாது மறைக்கப்பார்க்கின்றனளே! என்னே இவள் நெஞ்சழுத்தம்! என்ற எண்ணங்கொண்டு, "தோழி! உன் காதல் நாடகத்தை நீ மறைத்தாலும், நின் உடல் உறுப்புக்களும், காதற் கிளர்ச்சியால் தம் நிலையில் திரிந்து மாறுபடும் அவ்வுறுப்புக்களுக்கேற்றவாறு, தேர்ந்து அணியும் அணி வகைகளும் அதைப் புலப்படுத்து