பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 193

கின்றனவே, உன்னோடு உறவுடையவாய் இருந்தே, உனக்குத் துணை புரியாது, உன் மறையைப் புலப்படுத்தி விடும் அவற்றின் செயலை அறிய மாட்டாது, என்னை ஏமாற்றி விட்டதாக எண்ணுகின்றனையே! என்னே நின் பேதைமை !’ என்று எள்ளிக் கூறுவாள் போல், "அலர்முலை ஆய்இழை நல்லாய்!” என விளித்தாள்.

அவள் காதல் ஒழுக்கத்தைத் தான்் அறிந்திருப்பதை அவ்வாறு குறிப்பால் உணர்த்தியவள், அம்மட்டோடு நின்றாளல்லள். அப்பெண்ணை நோக்கித் " தோழி! தெரு வில் நின்று வருந்துவான் யாவனோ? அவன் வருத்தத்திற்கு நாம் காரணம் ஆகோம்!” என நீ கூறுகின்றனை. ஆனால் அவனோ, அவ்வழி வருவார் எல்லோரையும் தடுத்து நிறுத்தாது, என்னைத் தடுத்து நிறுத்தினான். பின்னர், ஒண் தொடி! என விளித்து, என்னையும், என் கையிற் கிடந்து அணி செய்யும் தொடி முதலாம் அணிகளையும் பாராட்டினான். அவ்வாறு, அவன் என்னைப் பாராட்டுவதால், அவன் என்பால் யாதோ ஒன்றை எதிர்நோக்குகிறான் என்பதை அறிந்து, அவன் எதிர்நோக்குவது யாதோ எனச் சிந்தித்திருக்கும் போதே, நின்னைத் தோழியாய்ப் பெற்ற பெரும்பேறுடைய அப்பெண், என்னைக் காதற் கருத்தோடு நோக்கினாள். அவ்வாறு நோக்கி அவள் தந்த காதல் நோய், என் உயிரை வாங்குகிறது. இந்நோய் தீரும் மருந்தை அளிக்குமாறு நின்னை வேண்டுகிறேன். அந்நோய், நின்முகம் நோக்கி, நின் அருளைப் பெறின் நீங்கும் என அறிந்தேன். அம் மருந்தளித்து, என் துயர் போக்கி மகிழ்விப்பாயாக!' என்று கூறினான். ஆகவே,

குறிஞ்சி-13