பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இ. புலவர் கா. கோவிந்தன்

தோழி! அவன் கவலை நின்பாற் கொண்ட காதலால் வந்துற்றதே. அது நின் முகத்தைக் கண்டு நின் அன்பினைப் பெற்றா லன்றித் தீராது. அவன்நோய் தீர்க்கும் மருந்து அதுவல்லது பிறிது ஒன்றும் இல்லாயின், அதற்கு நாம் செய்யக்கடவது யாது?’ என்று வினவுவாள் போல், "தெருவில் நிற்பவன் நின் காதலனே. அவன்பால் நினக்கும் அன்புளது. அவனை நீ ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். நாணம் மிகுதியால், என்னிடம் ஒப்புக் கொள்ள அஞ்சி, அவனைப் புறக்கணிப்பின், அவன் நோய் மிகும். நோய்மிகின் உயிர் அழியும். ஆகவே அதற்கு உடனடியாக ஒன்று செய்தே ஆக வேண்டும், எனும், தன் கருத்தைக் கூறாமல் கூறி உணர்த்தினாள். -

தோழி அவ்வாறு கூறிய பின்னரும், தான்் காதல் கொண்டு விட்டதை ஒப்புக் கொள்ள அப்பெண்ணின் உள்ளம் நடுங்கிற்று. அவள் நாணம் இடைநின்று தடுத்தது. அதனால், தோழி கூறியதை ஏற்றுக்கொள்ளாது, அவள்மீது சினங்கொள்வாள்போல், "தோழி! நீ கூறுவதை நோக்கின், நான் அவனை ஏற்றுக்கொண்டு, அன்பு காட்டி மகிழ் வித்தல் வேண்டும் என நீ எண்ணுகின்றனை. அதுவே நின் கருத்துமாம் எனத் தோன்றுகிறது. நன்று! அங்ங்னே ஆகட்டும்!” எனத் தன் இசையாமையினை இசைந்த வாய் பாட்டால் அறிவித்து விட்டு, "ஒழுக்க நெறி கெட்டு, ஒருவன், நடுத்தெருவில் நின்று, வாயில் வந்தன வழங்கு கின்றான். அவன் கூறும் அவற்றை நாம் உண்மை என ஒப்புக் கொள்ளுதல் வேண்டும்! அவன் கூறுவதில் எவ்வளவு உண்மை உளது என்பதை ஆராயாமலே, அதை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்! அதுதான்ே உன்