பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி 8 195

எண்ணம்? நன்று நன்று நின் கருத்து!" எனக் கூறி நையாண்டி செய்தாள்.

அதுகேட்ட தோழி, "அங்ங்னமாயின், அவ்வாறு உண்மையில் துயர் உற்று உரைக்கும் அவன் சொற்களை நம்புதல் கூடாது. அது அத்துணை எளிதன்று. ஆனால், தன் காதல் நோய் தணியப் பெறாமல், அவன் இறந்து போதல் நன்று. அது அவ்வளவு எளிது, என்று கூறுகின்றனை நீ! என்னே நின் நெஞ்சழுத்தம்!” எனக்கூறி மனம் உளைந்தாள்.

அவன் இறந்துபடுவன் என்று தோழி கூறக்கேட்ட அப்பெண், "தோழி! அவன் இறந்து விடுவன் என்று நீ அஞ்சுகின்றனை. அவ்வச்சம் நினக்கு வேண்டாம். அவனை நான் நன்கு அறிவேன். அவ்வளவு உயர்ந்த பண்பேதும் அவன்பால் இல்லை. நான் அவன்பால் காதல் கொண்டிருப்பதை, இவ்வூரார் உணர்ந்து என்னை அலர் துாற்றிப் பழிப்பதற்கு வழிசெய்து, தெருவில் நின்று கலாம் விளைக்கும் அவன்பால், செய்யத்தகாதன செய்ய நேர்ந்தவிடத்து உண்டாம் மன நடுக்கமோ, சிந்தையை அது சென்றவிடத்தில் செல்லவிடாது அடக்கி ஆளவல்ல அறிவுத் திறனோ, உயர்ந்த குடியில் பிறந்தார்பால் காணலாம் ஒழுக்கமோ இருக்கும் என எண்ணற்க. அவன்பால் அவை அறவே இல்லை. நானும், நிறையும், நல்லொழுக்கமும் அற்றவன் காதல் நோயால் இறந்து விடுவன் என நீ அஞ்சற்க!" என்றாள். .

"அவன் நானும் நிறையும்போலும் நற்பண்பற்றவன். அதனால், தன் காதல் உள்ளத்தைக் கண்டவரிடத்தில்