பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 ஆ புலவர் கா. கோவிந்தன்

காட்டி விட்டான். ஆனால் நானோ, அந்நானை இழவாது பெற்றுள்ளேன். அதனால், என் காதலை நீ அறிந்துவிட்ட இந்நிலையிலும், அதை ஒப்புக்கொண்டு உண்மை உரைக்கத் தயங்குகின்றேன். என்னோடு பழகிய நீ, இதை அறிந்திலையே! என்ன்ே நின் பேதைமை!” எனக் கூறியதாகக் கொண்டாள் தோழி! அதனால், "பெண்ணே! நின் அன்பைப் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும் எனும் வேட்கை நிறைவேறப் பெறாமையால், உறக்கம் ஒழிந்து, உறுதுயர் உற்று, நம் நட்பினை நயந்து வந்திருப்பானை, நாணம் முதலாம் நம் பெண்மைக் குணங்கள் இடைநின்று வருத்துவதால், ஏற்றுக்கொள்ளாது போக்கும் பண்பு, நம்பால் பொருந்துவதில்லை!" என்று கூறி அவளை இசையுமாறு செய்தாள்.

சுணங்குஅணி வனமுலை, சுடர்கொண்ட நறுநுதல். மணம்கமழ் நறுங்கோதை, மாரிவீழ் இருங்கூந்தல், நுணங்குஎழில் ஒண்தித்தி, நுழைநொசி மடமருங்குல், வணங்குஇறை வரிமுன்கை, வரிஆர்ந்த அல்குலாய்!

'கண்ணார்ந்த நலத்தாரைக் கதும்எனக் கண்டவர்க்கு, 5 உள்நின்ற நோய்மிக உயிர்எஞ்சு துயர்செய்தல் பெண்அன்று; புனைஇழாய்! எனக்கூறித் தொழுஉம்,

- தொழுதே, கண்ணும் நீராக நடுங்கினன்; இன்நகாய்! என்செய்தான்் கொல்லோ! இஃதுஒத்தன்; தன்கண்

பொருகளிறு அன்ன தகைசாம்பி, உள்ளுள் 10 உருகுவான்போலும் உடைந்து; தெருவின்கண், காரணம்இன்றிக் கலங்குவார்க் கண்டுநீ