பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி 205

அத்தகையான் தன் தோழிபாற் காட்டும் அன்பின் பெருமையையும், அத்தகையானைக் காதலனாகப் பெற்ற அவள் ஆகூழ் ஆற்றலையும், உள்ளுக்குள்ளே உணர்ந்து, உவந்து மகிழ்ந்தாள்.

"ஓர் ஆண்மகனைப் பெண்ணொருத்தி ஆட்கொள் வதோ” எனக் கூறித் தோழி நகைப்பது கண்ட அவ் விளைஞன், "இவள் துணை வேண்டி நான் இதை உரைக்க, இவள் அது கேட்டுத் துணை புரிவது செய்யாது, என் நிலை கண்டு எள்ளி நகையாடுகின்றனளே!” என்ற எண்ணம் எழச் சினம் கொண்டு, "தோழி! இவளைப் பெற நின் துணை வேண்டினேன். ஆனால் நீயோ, என் நிலை கண்டு நகைக்கின்றனை. ஒன்று கூறுகிறேன் கேள். இவள் என்னை ஆட்கொள்ளாது, தன் அன்பை மறந்து விடுவா ளாயின், இவளைப் பலரும் கண்டு பழித்து நகைக்குமாறு செய்வேன். என் குறையினை நின் ஊர்ப் பெரியோர்க்கு உணர்த்தி, அவர் உறுதுணை பெறுவான் வேண்டி, உங்கள் ஊர் மன்றத்தே, மடல்மா ஏறி வந்து நிற்பன். இது உறுதி!” என உரைத்துவிட்டுத் தன்னுார்க்கு மீண்டான்.

செல்வானைச் சிறிது நேரம் கண்டு நின்ற தோழி, அவன் தன்னோடு உரையாடிக் கொண்டிருக்கும் போதே, தாம் களவாடக் கருதிய பொருளிற்கு உரியார், அதன் அணித்தே இருப்பக் கண்டு, அப்பொருளை நேரே நோக்காது, வேறு எதையோ நோக்குவார் போல், அப் பொருளையே பலகாலும் நோக்கும் கள்வரைப் போல், அவன், அப்பெண்ணை நோக்காதான்் போல், பலகால் அவளையே நோக்கிய காட்சியையும், அக்காட்சி வழியே, அவன் அப்பெண்ணின்பாற் காட்டும் பேரன்பை யும்,