பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 இ. புலவர் கா. கோவிந்தன்

அவன் அவரை விடுத்துச் செல்லுங்கால் சொல்லிய சொல்லிற் சுடர்விடும் அவன் உள்ள உறுதியையும் உணர்ந்தாள். பின்னர், அப்பெண்ணின் அருகிற் சென்று அமர்ந்து, "தோழி! காதல் வெறி இவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. இந்நிலையில், அவன் எதையும் செய்யத் துணிவன். நம் தந்தை நின்னை மணம் செய்து தருதற்பொருட்டு வேண்டுவ எவையேயாயினும், அவற்றை, அவன் குறை காணாவாறு கொடுத்து, நின்னை மணம் செய்து கொள்வன். நின்னை மணந்து கொண்டல்லது அவன் மனம் அமைதி காணாது. அத்தகையான், அவன் கூறிச் சென்றவாறே மடலேறி வரினும் வருவன். ஆகவே, அவன் வேண்டுகோளை மறுத்தல் மதியுடைமை யாகாது. அவனை ஏற்றுக் கொள்வதே இனி நீ செய்யக் கடவதாம்!” எனக் கூறி, அவளை அவனை ஏற்றுக் கொள்ளுமாறு செய்தாள்:

எல்லா! இஃதுஒத்தன், என்பெறான்? கேட்டைக்காண்; செல்வம் கடைகொளச் சாஅய்ச், சான்றவர், அல்லல் களைதக்க கேளிர் உழைச்சென்று, சொல்லுதல் உற்று, உரைக்கல்லா தவர் போலப், பல்லூழ் பெயர்ந்து என்னைநோக்கும், மற்றுயான் நோக்கின்

. 5 மெல்ல இறைஞ்சும் தலை.

எல்லா! நீ, முன்னத்தான்் ஒன்று குறித்தாய்போற்

- காட்டினை; நின்னின்விடாஅ நிழல்போல் திரிதருவாய்; என்நீ பெறாதது? ஈது.என். . சொல்லின் மறாது ஈவாள்மன்னோ இவள்? 10