பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 இ. புலவர் கா. கோவிந்தன்

பெருகிற்று. அவளிடத்தில் அதைக் கூறி, அவள் இசை வினையும் பெறவேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்க இயலவில்லை. அதனால், அவள் அருகில் விரைந்து சென்று, அன்போடு பற்றி அணைத்துக் கொண்டான்.

இளைஞன் தன்னைப்பற்றி அணைத்துக் கொள்ளும் வரை, காதல் என்பதை அறியாதிருந்த அவள் உள்ளத்தில், அவன் அணைத்துக் கொண்ட அப்போதே, அக்காதல் அரும்பின்று மலரத் தொடங்கிவிட்டது. அதனால், அவன் அணைப்பினை அவள் வெறுத்திலள்; ஆயினும், அவன் தன்னைக் காதலிப்பதைத் தனக்கு அறிவித்துத் தான்ும் இசைந்த பின்னர் அணைத்துக் கொள்ளாது, தன் கருத்தறியாதே அது செய்தது காண, அவள் உள்ளத்தில், அக்காதலோடு சிறிது சினமும் பிறந்தது. அதனால், அவன் அணைப்பினை அகற்றி, அகல நின்றவாறே, அவனை நோக்கி, "ஏடா! என்மீது நீ காதல் கொண்டாய். ஆனால், அவ்வாறே, உன்மீது எனக்குங் காதல் உண்டா இல்லையா என்பதை அறிந்து கொண்டனையோ ? நீ என்னை விரும்புவது உண்மை. ஆனால், அதைப் போன்றே, நான் உன்னை விரும்புகின்றேனா இல்லையா என்பதை அறிந்து கொண்டனையோ? இல்லை. இதை அறிந்து கொள்ளாதே. என் கைப் பற்றி அணைக்கும் நீ ஒரு மானம் கெட்டவன்!" எனக் கூறிச் சீறினாள். -

அவள் அவ்வாறு சீறிவிழக் கண்டும், அவன் வருந்தினானல்லன். மாறாக நகைத்துக் கொண்டே, "ஏடி! பெண்ணே ! உனக்கு என்பால் காதல் உண்டா இல்லையா? நான் நின்னைக் கைப் பற்றியது பொருந்துமா பொருந்தாதா என்பனவற்றையெல்லாம் நீயே ஆராய்ந்து