பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 213

பார்த்துக்கொள். அவற்றையெல்லாம் ஆராயும் அறிவோ, அதற்கு வேண்டும் மன அமைதியோ எனக்கு இல்லை. நிறையப் பூத்து, பூத்தமலர் ஒன்றும் உதிர்ந்து போகாதே, அழகாக ஆடி அசையும் மலர்க் கொடி போன்ற நின் பேரழகைக் கண்டேன். அவ்வழகு என் அறிவையும், அது கருவியாக வரும் ஆராய்ச்சியையும் அழித்துவிட்டது. கட்டி அணைத்துக் கொள்வதில் பேரின்பம் உளது என உணர்ந்தேன். அணைத்துக் கொண்டேன். அவ்வளவே!” என அமைதியாக விடையளித்தான்்.

அது கேட்ட அப்பெண், "ஏடா! நின் அணைப்பில் இன்பம் கண்டேன். ஆகவே அணைத்துக் கொண்டேன்! என்று கூறுகின்றனையே, நீ அணைத்துக் கொள்வதால், எனக்கு உண்டான கேட்டினை உணர்ந்திலையே, என்னே நின் தன்னலம்! நமக்கு இன்பம் தருகிறது என்பதால், பிறர்க்குத் துன்பம் தரும் ஒரு செயலைச் செய்வது பேரறிவுடையார்க்குப் பொருந்துமோ?” எனக் கூறிப் பொருமினாள்.

அவள் அவ்வாறு வினவக் கேட்ட அவன், 'பேரொளி வீசும் பொற்றொடி அணிந்து நிற்கும் பெண்ணே! தமக்கு இன்பம் என்று பிறர்க்குத் துன்பம் தருவன செய்தல் நன்றாமோ” என்பன போலும் அறிவா ராய்ச்சி மேற்கொள்வதை விடுத்து, நான் கூறுவதைக் கேள்.

"மக்கள் நீர் உண்ணுகின்றனர். அவ்வாறு உண்ணுவார், எமக்கு நீர் வேட்கை உளது, அது தணிக்கும் இனிமை நீர்க்கு உண்டு என்று கருதி உண்பர்ேயல்லது இதை உண்ணுவதால் அந்நீர்க்கு நன்மை உண்டு. இன்பம்