பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 இ புலவர் கா. கோவிந்தன்

உண்டு எனக் கருதி உண்ணுவதில்லை. இதை அறியாது, நீ அவ்வாறு கேட்பது ஏனோ? அது மட்டுமன்று. ஐவாய் நாகத்தின் வாயில் அகப்பட்டு, அல்லற்படும் உயிரைப் போல், நின்னைக் கண்டு காதல் கொண்டு, மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய என் ஐம்பொறிகளும் உன்பால் இன்பம் பெறத் துடித்துக் கொடுமை செய்ய, அறிவிழந்து செய்வதறியாது போனேன். அதனால், நின் இசைவினைப் பெறாதே, நின்னைப் பற்றி அணைத்துக் கொண்டேன். ஆனால் அவ்வாறு பற்றிக் கொண்டதும் பிழையுடைத் தன்று. தம்மால் கண்டு காதலிக்கத் தக்க மகளிரைக் கண்டக்கால், அவரைக் காதலிக்கும் ஆடவர், அவரை அவர் இசைவினைப் பெறாதே, வலிந்து கைப்பற்றிக் கொள்வதும் ஒரு மணமுறையே என அறநூல்கள் கூறுகின்றன. ஆகவே, நான் செய்தது எவ்வழி நோக்கினும் பிழையுடைத்தன்று!" என்று கூறி நிறுத்தினான்.

தன் இசைவு பெறாது, தான்் கைப்பற்றியது அறனொடு பட்டதே என இளைஞன் கூறக் கேட்ட அப் பெண், "அறநூலும் அவ்வாறு கூறுமாயின், இவன் யான் எவ்வளவு கூறி மறுப்பினும், கேளாதே, என்னை வலிதிற் பற்றிக் கொள்ளவே துணிகின்றானாயின், "இப்பிறவியி லேயே யல்லது, முன் பிறவியிலும், இவளும் நானும் வேறல்லோம். மனைவியும் கணவனுமாகவே மகிழ்ந்து வாழ்ந்தோம். ஆகவே, இவளை இப்பிறவியில் பற்றிக் கொள்வதில் குற்றமில்லை!" என, அவன் மனத்தில் ஒரு கருத்து இருக்குமாயின், நெஞ்சே! நீ மட்டும் அதை மறுத்தல் எவ்வாறு பொருந்தும்? அவன் காதலை ஏற்றுக் கொள்வதே நின் கடமையாம்!” எனத் தன் நெஞ்சை