பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 215

நோக்கிக் கூறுவாள் போல் கூறி, அவன் கூட்டத்திற்கு இசைந்தாள்: . ஏஎ! இஃது ஒத்தன் நாணிலன்; தன்னொடு மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்; மேவினும் மேவாக்கடையும் அஃது எல்லாம் நீ அறிதி, யான் அஃது அறிகல்லேன், பூ அமன்ற

மெல்லினர் செல்லாக் கொடி அன்னாய் ! நின்னையான், 5 புல் இனிதாகலின் புல்லினென்; எல்லா!

தமக்கு இனிது என்று வலிதில் பிறர்க்கு இன்னா

செய்வது நன்றாமோ மற்று?

சுடர்த்தொடி போற்றாய்; களை, நின் முதுக்குறைமை,

போற்றிக்கேள்;

வேட்டார்க்கு இனிதாயினல்லது, நீர்க்கு இனிது என்று 10 உண்பவோ நீர் உண்பவர்? செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன் கொலோ! ஜவாய் அரவின் இடைப்பட்டு நைவாரா மையில் மதியின் விளங்கு முகத்தாரை

வெளவிக் கொளலும் அறன் எனக் கண்டன்று; அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றிக் கூறும் சொல் கேளான் நலிதரும், பண்டுநாம் வேறெல்லம் என்பது ஒன்று உண்டால், அவனொடு மாறுண்டோ நெஞ்சே! நமக்கு?

காம மிகுதியானே எதிர்ப்பட்டுத் தலைவனும்

தலைவியும் உறழ்ந்து கூறித் தலைவி கூடக் கருதிய பெருந்திணை: விதி: தொ. பொருள், 51