பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 221

தோழி அவ்வாறு கூறி முடிக்குங்காறும், அவளுக்கு மறு மொழி எதுவும் தராது, கால் விரல்கள் மண்ணைக் கிளறக் கேட்டு நின்று கொண்டிருந்தாள் அப்பெண். தோழி தன் காதலை உணர்ந்து கொண்டாள், இனி, அதற்கு அவள் துணையும் கிடைக்கும் என்ற எண்ணத் தால், அவள் உள்ளம் மகிழ்ந்தது, ஆயினும் அவள் ஒரு பெண். அதிலும், அச்சம், மடம். நாணம் முதலாம் பெண்மைக் குணங்களைக் குறைவறப் பெற்ற உயர்குலப் பெண். காதல் இன்பத்தில் பெருவேட்கை எழினும், உள்ளம் அதில் விரைந்து ஆழ்ந்து விடுவதில்லை, அயலான் ஒருவனை அடைந்து, பலர் அறிய வாழ்தலைப், பெண்கள் பேணிக் காக்கும் நாண், விரும்புவதில்லை. எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. நானால் நிறைந்த அந்நல்லாள் உள்ளத்திலும், அவ்வெறுப்புணர்வு ஓரளவு இடம் பெற்றிருந்தமையால், தோழியின் வேண்டுகோளை விரைந்தேற்றுக் கொள்ளத் தயங்கினாள். அதனால், தோழியை அழைத்துத் தோழி! மறுவலும், அவ்விளைஞன் பால் சென்று, அவள் நின்காதலை ஏற்றுக் கொள்வதைத் தன் கடமையாகக் கொண்டு விட்டாள்!" என்று கூறாதே. அவ்வாறு கூற வில்லை என்பதற்கு ஆணையாக, என்மெய்யைத் தொட்டுச் சூளுரைத்துச் சொல்!” என்றாள்.

அப் பெண்ணின் செயலும் சொல்லும் காணத் தோழிக்கு உள்ளூர மகிழ்ச்சி கலந்த நகை. நான் இவள் பால் இவ்வளவும் கூறுங்கால், அதற்கு வாய்திறந்து ஏதும் தடை கூறவில்லை. கால் விரல்கள் மண்ணைக் கிளறக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவ்வமைதி, அவள் இசை வினையன்றோ புலப்படுத்தியது? அற்றாகவும் இப்போது,