பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 & புலவர் கா. கோவிந்தன்

இவ்வாறு பொய்ச் சினம் காட்டிக் கூறுவதைக் கேட்டு யானோ ஏமாறுபவள் ? என எண்ணியவளாய் அப் பெண்ணை நோக்கித், "தோழி! நான் அவ்வாறு கூறியது குற்றமோ? நான் ஏன் அவ்வாறு கூறினேன் என்பதற்காம் காரணத்தைக் கூறுகிறேன் கேள். அவ்விளைஞனைப் பற்றி, நான், நின்னோடு பேசிக் கொண்டிருக்குங்கால், நீ யாது செய்து கொண்டிருந்தனை? என் அண்மையில் நீ அமைதியாக நின்று கொண்டிருக்க, நின் கால்கள் நிலத்தைக் கிளறிக் கொண்டன்றோ இருந்தன. அந்நிலை, நீ என் கருத்தினை ஏற்றுக் கொண்டனை என்பதை யன்றோ உணர்த்திற்று. இதை நீ மறுத்தல் ஒண்னுமோ? உன் உள்ளம் அவன் தரும் இன்ப உணர்வில் ஆழ்ந்து கிடக்க, அதை ஏற்றுக் கொள்ளாதாள்போல் நடந்து கொள்ளுதல் நினக்கு என்பால் எளிது. நின் உள்ளக் கருத்துணர்ந்த நான் அதைப் புரிந்து கொள்வேன். ஆனால், அவனை அடைந்த விடத்தும், என்பால் நடந்து கொண்டது போல், வெறுத்த உள்ளத்தளாய் நின்று விடாதே. அவனோடு ஒன்று கலந்துவிடு!” என்று கூறி அவளை அவன்பாற் கொண்டு சென்று விடுத்தாள்.

நோக்குங்கால் நோக்கித் தொழுஉம், பிறர் காண்பார் தூக்கிலி; தூற்றும்பழிஎனக் கைகவித்துப், போக்குங்கால் போக்கும் நினைந்து இருக்கும். மற்றுநாம் காக்கும் இடம் அன்று இனி;

எல்லா! எவன் செய்வாம்? 5

பூக்குழாய்! செல்லல் அவனுழைக் கூஉய்க் கூஉய் விரும்பி, யான் விட்டேனும் போல்வல்; என்தோள்மேல்