பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி 223

கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; "ஈங்காக இருந்தாயோ? என்று ஆங்கு இற; அவன் நின்திருந்தடிமேல் வீழ்ந்து இரக்கும், நோய்தீர்க்கும்

10 மருந்துநீ ஆகுதலான்!

இன்னும், கடம்பூண்டு ஒருகால் நீவந்தை, உடம்பட்டாள் என்னாமை என்மெய்தொடு; இஃதோ, அடங்கக் கேள்.

நின்னொடு சூழுங்கால், நீயும் நிலங்கிளையா என்னொடு நிற்றல் எளிதன்றோ? மற்று.அவன் தன்னொடு நின்றுவிடு.”

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி, அவன் நிலைமை தலைமகட்குக்கூறி, அவளைக் குறைநயப்பித்தது இது.

2. தூக்கிலி - ஆராய்ந்து பாராதவன்; கைகவித்து - கையை ஆட்டி, 3. போக்கும் நினைந்து- வறிதேமீள்வதால் வருத்தும் காதல் நோயை நினைத்து, 6. செல்லல் - வருத்தம்; செல்லல் அவன்வருந்தும் அவன்; கூஉய்க் கூஉய் - பலகால் கூப்பிட்டு,9. ஆங்கு - அவள்நிற்கும் இடம்; இற-சென்று சேர்வாயாக, 12. கடம்பூண்டு - கடமையாக மேற்கொண்டு வந்தை - வாராய் வந்து இதைக்கேள் எனும் பொருள் தருவது; 13. என்னாமை - என்று சொல்லாமைக்கு; மெய்தொடு-மெய்தொட்டுச் சூள்உரை; நீவந்தை; இன்னமும், ஒருகால், உடம்பட்டாள் என்னாமை என்மெய்தொடு என மாற்றிப் பொருள்கொள்க. 14. இஃதோ-நான்செய்த குற்றம் இதுவோ? அடங்கக் கேள்-சுருங்கச் சொல்லுகிறேன் கேள்; 15. நிலங் கிளைத்தல் - உள்ள ஒப்புதல் உணர்த்தும் குறி, 16. என்னொடு நிற்றல்-என்னோடு மாறுபட்டாள் போல் நிற்றல். 17. தன்னொடு நின்றுவிடு - தலைவனோடு மாறுபடாது கலந்து விடு.