பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

முத்தேர் முறுவலாய்!

ஒர் இளைஞன் ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொண்டான்; நாநயம் நன்கு வாய்க்கப் பெற்றவன் அவ் விளைஞன், தன்னோடு சினந்து மாறுபட்டிருப்பாரையும், தன் நகை மொழியால், தன் வயமாக்க வல்லவன். சொல்லாடல் வன்மையில், அவளும் அவனைப் போன்றே தேர்ந்து விளங்கினாள். பிறப்பு, குலம் முதலாம் ஏனைய சிறப்புக்களைப் போன்றே இவ்வகையாலும் ஒத்த இயல்பு வாய்ந்த அவ்விருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். அவள் விரும்பும் மலரும், மரத்தழையால் ஆய ஆடையும் அளித்தும், அவள் தோளிலும் மார்பிலும், சந்தனக் குழம்பால், கரும்பு போலும் ஒவியங்கள் வரைந்தும் அவளை மகிழ்வித்துத் தான்ும் மகிழ்ந்தான்் அவன். அம்மகிழ்ச்சியால், அவள் பண்டினும் பேரழகு பெற்றுத் தோன்றினாள்; அவ்வழகைக் கண்டு அக மகிழ்ந்திருந்த அவன், சில நாட்களாக, யாது காரணத்தாலோ ஆங்கு வந்திலன். அதனால் அவள்