பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 225

வருந்தினாள்; அவ்வருத்தம் அவள் அழகைக் கெடுத்தது. மாசற்ற கண்ணாடியில் கண்டாற் போலும் பேரழகு தோன்ற நின்ற நிலை கெட்டது. அக் கண்ணாடிமீது, வாயால் ஊதிய ஆவி படர்ந்தவழித் தோன்றும் உருவம் போல், பசலை படர்ந்து, பண்டை வனப்பிழந்து போக, வருந்தியிருந்தாள்.

சின்னாட்கள் கழித்து அவன் வந்தான்். தன்னை மறந்து சென்று, காண இயலாவாறு மறைந்து வாழ்ந்த அவன்மீது அவளுக்குக் கடுஞ்சினம். அதனால், அவனை மலர்ந்த முகங்காட்டி மகிழ்ந்து வரவேற்காது, வெறுத்த உள்ளத்தளாய் அவ்ன் முகத்தைக் காணவும் விரும்பாது, தன் பின்புறம் காட்டி நின்றாள். அச்செயல் கண்டு அவன் வருந்தினானல்லன். இதுகாறும் காணாதிருந்த அவள் கூந்தல் அழகை, அன்று கண்டு மகிழ்ந்தான்். மறுவற்று விளங்கும் முழுமதிபோல், பேரழகு செய்யும் அவள் முகம் தோன்றாவாறு, அம்மதியை மறைக்கும் கருமேகம்போல், மறைத்துத் தோன்றும் அவள் மயிர், கரிய பாம்பின் கண்கிடந்து, அதன் கரியநிறம் பின்னணியாகப் பேரொளி வீசும் கார்த்திகை எனும் விண்மீன் கூட்டங்கள் போல், துண்ணிய நூலாற் கட்டப் பெற்றுப் பின்னலைச் சுற்றிக் கிடந்து அணிசெய்யும் பன்னிற மலர்கள் ஆகிய இவற்றால் கண்டார் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அவள் கூந்தல் அழகைக் கண்டு மகிழ்ந்தான்். அவ்வழகால் மகிழ்ந்த அவன், தன் சொல்லால் அவளை மகிழ்விக்க எண்ணினான், எண்ணியவன் அவளை அணுகிப், பெண்ணே, நீ பண்டிருந்தது போலாது, இப்போது பேரழகு பெற்று விளங்குகின்றனை. இப்பேரழகு,

குறிஞ்சி-15