பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ல் புலவர் கா. கோவிந்தன்

உன்னைக் காதலித்து, நான் காட்டிய அன்பின் விளைவே யன்றோ? என் அன்பால் அழகு பெற்று விளங்கும் நீ, அவ் அன்பிற்கு ஈடாக எனக்குப் பெரும் பொருள் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளனை யன்றோ ? எனக் கேட்க விரும்பினான். விரும்பியவன், பண்டு என்னால் அழகு பெற்றனை என்ற பொருளும், எனக்குப் பொன்தரக் கடமைப்பட்டுள்ளனை என்ற பொருளும் ஒருங்கே தோன்றுமாறு, “பண்டு பெரும் பொன்படுகுவை !” என்றான்.

அதுகேட்ட அப்பெண், தன் நெஞ்சைப் பார்த்துக் கூறுவாள்போல், "நெஞ்சே! இவனால், நான் அழகு பெற்றேன் எனவும், அதனால், இவனுக்குப் பொன்தரக் கடமைப்பட்டுளேன் எனவும், இவன் கூறுவதைக் கேளேன்!” என்று கூறியவள், அவனைப் பார்த்து "ஏடா! கனவில் காண்பதுபோல், ஒரோவொருகால் வந்து, என் தோளில் தொய்யில் எழுதிச் சென்றதால், நான் ஓரளவு அழகு பெற்றேன் என்பது உண்மை. ஆனால், நான் பெற்றுள்ள இப்பேரழகிற்கெல்லாம் நீயே காரணமாகாய். மேலும், அவ்வாறு, ஒரோவொருகால் வந்து, மகிழ்ச்சி அளித்தமையால், நானும் சிறிது மகிழ்ந்ததல்லது, நின் மார்பை விடாது புல்லி, அதனால் பேரழகு பெற்றே னல்லன். உன் அன்பிற்கு அடிமைப்பட்டு, ஒரோவொரு கால் பணியாற்றிச் சிறிதே பயன் பெற்றதல்லது, நின்கீழ்த் தொடர்ந்து பலநாள் பணியாற்றிப் பெரும் பயன் பெற்றேனல்லேன். உண்மை அதுவாகவும், உனக்குப் பெருங்கடன் பட்டுள்ளேன் எனக் கூறல் எவ்வாறு பொருந்தும்?' எனக் கூறினாள். இதை விளங்கிய