பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ஆ 227

(சொற்களால் கூறாது, "நின் மார்பைவிடாது புணர்ந்தேன் கொல் நின்கீழ்விடாது பணியாற்றினேன் கொல்? எனும், இருபொருளும் தரும் "உழுவது உடையமோ யாம்?" எனும் குறிப்புத் தொடரால் கூறினாள்.

அவள் அவ்வாறு வினவக் கேட்ட அவன், "நான், இடையே சின்னாட்கள் வந்து காணாமையால், வருந்து கிறாள் இவள். இடைவிடாது வந்து மகிழ்ச்சியூட்ட வேண்டும் என விரும்புகிறாள்!” என்பதறிந்தான்். அதனால் அவளைத் தான்் மறந்திலன் என்பதையும், இனியும் மறவான் என்பதையும் உணர்த்த விரும்பினான்; விரும்பியவன், பெண்ணே! நான் என்றும் மறவாது, இவள் வந்து சென்றமையால், என்னை இடைவிடாது பெற்று மகிழ்ந்தாய். அதனாலன்றோ, நான் நின் தோளில் சந்தனக் குழம்பால், கரும்பு போலும் தொய்யில் வரைந்து மகிழ்ந்தேன். கருங்குவளைபோல் கருத்துத் தோன்றிய நின் கண்கள் செந்நிறமும் சிறந்த அழகும் பெற்றுத் தாமரை மலர்போல் தோன்றி அழகு செய்வதும் அவ்விடைவிடாப் புணர்ச்சியாலன்றோ? இவ்வாறு நான் இடைவிடாது வந்து, மகிழ்ச்சியூட்டியுள்ளதை நின்தோளின் தொய்யிலும், தாமரை போலும் தனியழகு பெற்று விளங்கும் நின் கருங்குவளைக் கண்களும் உறுதி செய்வனவாகவும், "நீ வந்திலை நின்னால் பெரும் பயன் கொண்டிலேன்!” என்று கூறல் எவ்வாறு பொருந்தும்? என்னால், நீ பெரும் பயன் கொண்டுள்ளனை. ஆகவே, நீ எனக்குப் பொன் தரவும் கடன்பட்டுள்ளனை. நிற்க. நீ அளித்த மகிழ்ச்சி போதாது. நினக்குப் பெரும் பொன் அளிக்க, நின்பால் நான் பெற்ற இன்பம் போதாது. அதற்கு நீ மேலும்