பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 ஆ. புலவர் கா. கோவிந்தன்

மகிழ்ச்சியளித்தல் வேண்டும். நான் நின்னிடத்தில் பேரின்பப் பெரும் பயன் கொள்ளுதல் வேண்டும்! என்பது நின் கருத்தாயின், அவ்விருப்பத்திற்கு நான் தடை கூறேன். இனி, உன்னைப் பிரியேன். வரைந்து கொள்ளத் துணிந்து விட்டேன். ஆதலின், ‘இனி நீ என்னை இடைவிடாது பெற்று மகிழலாம். என் கீழ்த் தொடர்ந்து பணியாற்றிப் பெரும் பயன் கொள்ளலாம்! என்றெல்லாம் கூறக் கருதினான். கருதியவன், அப்பொருள் தருமாறு, "கரும்பெல்லாம் நின் உழவன்றோ? குவளையும் நின் உழவன்றோ? என்னை மேலும் பலகால் உழுவாய்!” என்ற தொடர்களை வழங்கினான். t -

அவ்வாறு அவன் கூறிய அத் தொடர்கள், உழு தொழில் மேற்கொண்ட உனக்குக் கரும்பையும், குவளையையும் விளைக்கத்தான்் தெரியுமேயல்லது, பயன் அளிக்கும் வேறு எப்பொருளை விளைக்கத் தெரியும்? என எள்ளி நகையாடிக் கூறிய ஒரு பொருளையும் உணர்த்துவது உணர்ந்து மகிழ்க

அவன் கூறியன கேட்டாள் அப்பெண். அவன் ஒரே வொருகால் வந்து, தோளில் தொய்யில் வரைந்து சென்றது உண்மை. அத்தொய்யில் பெற்றதால், அத்தோள்கள் ஒரளவு அழகு பெற்றுக் காண்பதும் உண்மை. ஆனால், அவன் கூறுமாறு நீலமலரை நிகர்த்த கண்கள் தாமரை போல் சிவந்து தோன்றுவதும், ஏனைய உடலுறுப்புக்கள் பொன்னிறம் பெற்றுத் தோன்றுவதும், அவன் வந்து அன்பு காட்டியதன் பயன் அன்று. அத்தோற்றம் அழகுமாகாது. அவன் வாராமையால், உறக்கம் ஒழிந்து வருந்தினமை யால் கண்கள் சிவந்தன. வருந்தியதால் வாடிய