பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ஆ 229

உறுப்புக்கள், பசலை படர்ந்து பொன்னிறம் பெற்றன. உண்மை இதுவாகவும், இவையெல்லாம் தன் பேரன்பின் பயனே என்றும், அதற்காக, நான் இவனுக்குப் பொன் அளிக்கக் கடன்பட்டுள்ளேன் என்றும் கூறுகின்றனனே, என்னே இவன் பேதைமை !' எனத் தனக்குள்ளே எள்ளினவள், "நின்னால், நான் பெரும் பயன் பெற்றிலேன். மாறாக, என் அழகை அழிக்கும் பொன்னிறப் பசலையினையே என் உடல் உறுப்புக்கள் பெற்றன!” என, அதை அவன் அறிய, விளங்க உரைப்பதும் செய்தாள்.

அது கேட்ட அவன், அவள் தன்னை இமைப் பொழுதும் பிரியாதிருக்கப் பெற்றுப் பசலையொழிந்து, மகிழ்ந்து வாழ விரும்புகிறாள் என்பதை உணர்ந்தான்். அதனால், அவளை நோக்கிப் "பெண்ணே ! உனக்கு நான் தந்த அப்பசலையாம் பொன் அனைத்தையும், நானே பெற்றுக் கொள்கின்றேன். இனி, உன்னை மணந்து கொண்டு, சிறிதும் பிரியாது வாழ்வேன், வருந்தற்க!" எனக் கூற விரும்பினான். ஆனால், அதையும் அவன் விளங்க உரைத்தான்ல்லன். கவர்த்த நடையால் கூறக் கருதிப் "பெண்ணே ! ஒருவன், ஓர் அர்சனைச் சார்ந்து, அவன் ஊதியம் பெற்று வாழ்ந்து, அவ்வாழ்வால் சிறந்து விளங்கிய வழி, அவ்வரசன், அவனைப் பயன் கொண்டு பெரும்பொருள் ஈட்டிக் கொள்வன்!” எனும் பொருள் தரும் தொடர் ஒன்றைக் கூறி, "அதைப்போல், என்னை அடைந்து, என்னால் இன்பம் பெற்றுப் பேரழகு தோன்ற நிற்கும் நின்னைப் பயன்கொண்டு, நின்னால் பேரின்பம் நுகரத் துணிந்துவிட்டேன்!” எனும் தன் கருத்தை, அவள் உய்த்துணர வைத்தான்். அவன் கூறியதைக் கேட்ட அப்பெண், அத்தொடர், “தனக்குரிய பொருளை நுகர்ந்து