உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 ல் புலவர் கா. கோவிந்தன்

போனவன் ஒருவனைப் பின்னொருகாற் கண்ட அரசன், அவனைப் பற்றி வருத்தி, அவனிடமிருந்த பெரும்பொருள் களைக் கொண்டாற்போல், யானும் என் நலன் உண்டு மகிழ்ந்த நின்னை வருத்தி, நின்பால் உள்ள நலத்தையெல் லாம் நுகர்ந்து விடுவேன்!” எனும் பொருள் தரத் தன்னை நோக்கிக் கூறியதாகக் கொண்டு, அதை மறுக்காது, "அங்ங்னமே ஆகுக!” எனக் கூறி அடங்கினாள்.

"அங்ங்னமே ஆகுக' என்ற அவள் கூற்றில் அடங்கி யிருக்கும் வெறுப்புணர்ச்சியை உணர்ந்த அவன், அவளை நோக்கிப் "பெண்ணே! முத்துப் போலும் நின் பற்கள், முறுவல் தோற்றி, எனக்கு மகிழ்ச்சியூட்டுவதற்கு மாறாகச், சினத்தால் மூடிக்கிடக்கும் வாயினுள் கிடந்து, பயனற்றுப் போகின்றனவே!” என எண்ணி வருந்தும் தன் வருத்தம் தோன்ற, அவளை, "முத்தேர் முறுவலாய்!” என விளித்து, “நின் உடலிற் படர்ந்து பாழ் செய்யும் அப்பொன்னிறப் பசலை கெடவேண்டுவது நின் கருத்தாயின், வேங்கைமலர் போலும் தேமல்கள் படர்ந்து பேரழகு காட்டும் நின் மேனி, என் மேனியை ஒருமுறை தழுவினும் நின்னை அறவே விட்டு ஒடும். ஆதலின், ஒருமுறை தழுவிச் செல்வாயாக!” என்று வேண்டிக் கொண்டான். அவன் கூறிய அக்கூற்று, "உன் உள்ளத்தில் உண்மை அன்பில்லை யாகவும், பொய்யாகவாவது, ஒருமுறை, நீ என்னைத் தழுவிக் கொள்வையாயின், நீ தரக்கடவை பொன்னெல் லாம் பெற்றனவாகக் கொண்டு கழித்து விடுவன்!" எனும் நகைப் பொருளும் தருவது அறிந்து அகம் மகிழ்ந்து, அவன் கூட்டத்திற்கு இசைந்தாள் அப்பெண். -