பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 231

“அனிமுகம் மதிஏய்ப்ப; அம்மதியை நனிஏய்க்கும் மணிமுக மாமழை நின்பின்ஒப்பப், பின்னின்கண் விரிநுண்ணுல் சுற்றிய ஈரிதழ் அலரி, அரவுக்கண், அணிஉறழ் ஆரல்மீன் தகையொப்ப, அரும்படர் கண்டாரைச் செய்து, ஆங்குஇயலும் 5 விரிந்துஒலி கூந்தால்! கண்டை எமக்கும் பெரும்பொன் படுகுவை பண்டு;

ஏஎ! எல்லா! மொழிவது கண்டை; இஃதுஒத்தன் தொய்யில் எழுதிஇறுத்த பெரும்பொன் படுகம்; உழுவது உடையமோ யாம்? - 10

உழுதாய், சுரும்புஇமிர் பூங்கோதை அந்நல்லாய்! யான்நின் திருந்திழை மென்தோள் இழைத்த மற்றுஇஃதோ கரும்புஎல்லாம் நின்உழவு அன்றோ? ஒருங்கே, துகள்அறு வாள்முகம்ஒப்ப மலர்ந்த 15 குவளையும் நின்உழவு அன்றோ? இகலி முகைமாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல என்உழுவாய் நீ மற்று இனி! -

எல்லா! நற்றோள் இழைத்த கரும்புக்கு நீகூறும், முற்றெழில் நீலமலர் எனஉற்ற 20 இரும்புஈர் வடியன்ன உண்கட்கும் எல்லாம் பெரும்பொன் உண்டுஎன்பாய் இனி,

நல்லாய்! இகுளை கேள்; ஈங்கே தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின் வேந்து கொண்டன்ன பல; - 25