பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

ஏதில் குறுநரி

ஒர் இளைஞன் ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொண்டான். அவளும் அவனைக் காதலித்தாள். இரு வரும் ஈருடலும் ஒருயிருமாய் உயர்ந்த அன்புடையராயி னர். ஆனால், அவர் கொண்ட காதலை அவர் பெற்றோர் அறியார். அதனால், ஊரார் அறியாவாறு, ஒருவரை யொருவர் கண்டு மகிழ்ந்து வந்தனர். அப்பெண் பெருஞ்செல்வர் மகளாதலாலும், அவர் மகப்பேறின்றிப் பல நாள் வருந்திய பின்னர் வந்து பிறந்தவள் ஆதலாலும், அவளை அவள் பெற்றோர் வீட்டை விட்டு வெளிச் செல்லாவாறு வளர்த்து வந்தனர். அதனால், பகலிற் சென்று அவளைக் 35 from மாட்டாமையால், அவ்விளைஞன், எவரும் அறியாவாறு, இரவிற்சென்று காணத் தொடங்கினான். அதற்கு அப் பெண்ணின் தோழி பெருந்துணை புரிந்தாள். ஆயினும் அவ்வாறு இரவில் வந்து அவளைக் கண்டு மகிழ்தலும், அவ்வளவு எளிதில்