பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 இ. புலவர் கா. கோவிந்தன்

நிகழ்ந்துவிடவில்லை. ஊரில் அரசன் காவலும், வீட்டில் அன்னை காவலும் அத்துணைக் கடுமை உடையவாம். அதனால், அவர் அயரும் காலம் பார்த்தே அவன் வரவேண்டியிருந்தது. மேலும், அவர் அறியாவாறு வந்து சேர்ந்தவிடத்தும், வேறு பல இடையூறுகளால் அவளைக் காண இயலாதே மீளவும் நேர்ந்தது. இதனால், அப்பெண் அவனைக் காணமாட்டாதே பல நாட்களைக் கழிக்க வேண்டியதாயிற்று. அவனைக் காணாமையால், அவள் துயர் உற்றாள். அத்துயர்க் கொடுமையால் அவள் உடல் நலமும் கெட்டது.

அவள் உடல்நலக் கேட்டினைத் தோழி கண்டாள். அக்கேடு கண்டு, ஊரார் அலர் தூற்றத் தொடங்கி விடுவரோ என அஞ்சினாள். அதனால் இவ்வாறு, அவன் இரவிலும் பகலிலும், பிறர் அறியாவாறு வந்து செல்வதை வெறுத்தாள். அவர் இருவரும் மணந்து மனம் நிறை வாழ்வு பெற்று வாழ வேண்டும் என விரும்பினாள். அதுவே, அப்பெண்ணின் துயர்தீர்க்கும் மருந்துமாம் என உணர்ந்தாள். அதனால், அவன் வந்தால், அவன்பால், இரவில் வந்து மறைந்து வாழ்வதை விடுத்துப் பலர் அறிய மணந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுதல் வேண்டும் என உட்கொண்டாள். அவள் சொல்லும்வகை அறிந்த நல்ல்.வள். அதனால், நாம் கொண்ட இக்கருத்தை, அவன்பால் அவ்வாறே வெளிப்படக் கூறல் பண்புடைமை யாகாது. நாம் கருதுவது இதுவே என்பதை அவன் தான்ாகவே அறிந்து கொள்ளுதல் வேண்டும். அப் பயனளிக்க வல்ல சொற்களை, அப்பயன் அளிக்கும் வன்க