பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 235

யில் கூறுதல்வேண்டும். இந்த நல்லபயனைப் பெறப், பொய் கூற வேண்டினும் கேடில்லை! என எண்ணினாள்.

இவ்வாறு அவள் எண்ணியிருக்க, ஒருநாள், அவ்விளைஞன், அப்பெண்ணின் வீடு நோக்கி வந்து, அவளை எதிர்நே. க்கி, ஓரிடத்தே ஒளிந்திருந்தான்். அதைக் கண்டு கொண்டாள் தோழி. அவள் தன்னைக் கண்டு கொண்டதை அவன் அறிந்திலன். அறியாதே அவன் ஆங்கிருக்கத் தோழி, அவன் கேட்குமாறு அப்பெண்ணிடம் பொய்க் கதையொன்றைத் தான்ே படைத்துக் கூறத் தொடங்கினாள்.

"காதலனைக் காணாக் கலக்கத்தால் நின் உடல் நலம் குன்ற, அதனால், முன்னர் அணிந்திருந்த அணிகள் நின் உடல் உறுப்புக்களில் பொருந்தாவாகவே, அவற்றை அழித்துத் தளர்ந்த நின் உறுப்புக்களிற் பொருத்துமாறு சிறியவாகத் திருத்திச் செய்த அணிகளை உடையவளே! நேற்று இரவு நிகழ்ந்த ஒருநிகழ்ச்சியை, இவ்வூரார் அறியின், ஒருநாளெல்லாம் ஓயாது நகைப்பர். அவ்வாறு பெருநகைக் கிடமாகும் அந்நிகழ்ச்சி யாது என்பதைக் கூறுகிறேன் கேள். மயிர்கள் உதிர்ந்து வழுக்கை கண்ட தலையும், அத் தலைமீது போர்த்த போர்வையும், கருங்குட்டத்தாலே குறைந்து போன காலும் கையும் உடையனாய்த் தன் பிறப் பொழுக்கம் கெட்டு, நம் சேரியை விட்டு நீங்காது வாழும் முதிய பார்ப்பன முடவன் ஒருவன் உளன். இரவிற் செல்லும் நினக்கு, அவனால் யாதேனும் இடையூறு உண்டாதலும் கூடும். ஆகவே, தோழி! அவனளவில் நீ