பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 இ. புலவர் கா. கோவிந்தன்

சிறிது விழிப்பாய் இருத்தல் வேண்டும்! என, நீ பலகால் கூறியுள்ளனை. நீ அஞ்சியவாறே நெருநல் நடந்துவிட்டது!

"நேற்று இரவு, ஊரெல்லாம் உறங்கிவிட்ட பின்னர், அழகிய துகிலால் ஆன போர்வையைப் போர்த்திக் கொண்டு, நம்முடைய அன்பன் கூறிய இடத்தே சென்று, அவன் வருகையை எதிர்நோக்கியிருந்தேன். ஆங்கு அந் நேரத்தில் எவ்வாறோ வந்து சேர்ந்தான்் அப் பார்ப்பான். வந்தவன், என்னைக் குனிந்து பார்த்துவிட்டுப் பெண்கள் வெளிவருவதற்கு ஏற்றதல்லாத இக்காலத்தில், இவ் விடத்தில் வந்து தனித்து நிற்கும் ஏ! பெண்ணே! நீ யார்? என்று கேட்டுக் கொண்டே என் அண்மையில் வந்து, ‘என்னிடம் நீ அகப்பட்டுக் கொண்டாய்! இனி நீ பிழைத்துப் போதல் இயலாது! என்று கூறியவன், திடுமென என்னைப் பணிந்து, வைக்கோற்போரைக் கண்ட கிழ எருது, பற்கள் தேய்ந்து போனமையால், அதைத் தின்னமாட்டாதாயினும், அப்போரை விட்டகல மனமிலாது அதன் அருகிலேயே கிடத்தல்போல், என்னை விட்டு நகராதே நின்று, தையால்! தம்பலம் தின்றியோ?” எனக் கேட்டுக் கொண்டே, தன் வெற்றிலை பாக்குப் பையைத் திறந்து, இதோ வெற்றிலை பாக்கு. வேண்டுவ எடுத்துக்கொள்! எனக்கூறி என்பால் நீட்டினான். அவன் இவ்வளவுங் கூறவும், யான் வாய் திறந்தேனல்லன், வாய் திறவாது நின்றமையால், அவன் என்னைப் பேய் என்று கருதிவிட்டான். அதனால், அச்சங்கொண்டு, தான்் மேற்கொண்ட அக்காதல் நாடகத்தைக் கடிதின் மற்ந்து, என்னை விட்டு அகன்றான். அகன்று நின்றவாறே,