பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 237

ஒருவாறு உளந்தேறி, நீ பெண்பாற் பிசாசு என்றால், நான் ஆண்பாற் பிசாசு. இதை நீ அறிந்துகொள். என்பால் அன்பு கொண்டு என்னை ஏற்றுக்கொள். ஏற்றுக் கொள்ளாது இன்னல் தரின், உனக்குப் பலி உணவு கிடைக்காவாறு, இவ்வூரார் உனக்கு இடும் பலியையும் நானே உண்டு விடுவன் ! என வாயில் வந்தனவற்றைக் கூறத் தொடங்கினான். பார்ப்பான் அஞ்சிவிட்டான் என்பதை அறிந்துகொண்ட யான், உடனே மேலும் அஞ்சி அகலு மாறு, மண்ணை வாரி வாரி, விடாமல் அவன்மீது சொரிந்தேன். அதுகண்ட அவன் அலறிப் புடைத்து, ஊரெல்லாம் கேட்டு ஓடிவருமாறு பெருங்கூச்சல் எழுப்பி விட்டான். அதனால், ஆங்கே மேலும் நிற்றல் அலர் எழற்கு ஏதுவாம் என அஞ்சி யான் வந்துவிட்டேன்.

"புலியைப் பிடிக்க விரித்த வலையுள், ஒரு குறுநரி வந்து வீழ்ந்ததைப்போல், நம் அன்பனை எதிர்நோக்கி நின்ற என்முன், இவ்வம்பன் வந்து இடையூறு தந்தான்். இவ்வாறு, தனித்திருக்கும் மகளிர்பாற் சென்று, தகாதன கூறித் திரிவதையே தன் தொழிலாகக் கொண்டுவிட்ட அப்பார்ப்பானுடைய இந் நாடகத்தால், யான் நம் அன்பனைக் கண்டு மகிழ்தல் கெட்டு விட்டது. இனி அவனைக் காண இரவிற்செல்வது அத்துணை ஏற்புடைத் தன்று!" இதுவே அவள் கூறிய கட்டுக்கதை,

தோழி, இவ்வாறு கூறக்கேட்ட அவ்விளைஞன், அவள் கூறியது கட்டுக்கதையே, உண்மை நிகழ்ச்சியன்று என்பதை உணர மாட்டானாதலின், "எனக்கு இன்பம்