பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 ↔ புலவர் கா. கோவிந்தன்

தருவதாக, நான் கருதும் இவ்விரவுக்குறியால், இவர்கள் இவ்வளவு துயர் உறுகின்றனரே! இதை நான் அறியாது போனேனே! என்னே என் அறியாமை : என்னே என் தன்னலம்! இனி இரவில் வந்து, இவரை இவ்வாறு வருந்த விடுவதோ, தனித்துக் கிடந்து துயர் உறச் செய்வதோ செய்யேன். விரைவில் வந்து வரைந்து கொண்டு பிரிவறியாப் பெருவாழ்வு பெற்று யானும் மகிழ்வேன். இவர்க்கும் மகிழ்ச்சி தருவேன்!” எனத் துணிந்த உள்ளத்தனாய் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

- இன்பம் துய்க்க வேண்டும் எனும் ஆர்வம் உந்த இரவின் இடையூறு கருதாது வந்த அவனை, வரைந்து கொள்ளும் துணிவோடு வந்த வழியே மீளச்செய்ய, வல்லமையால் வகுத்துரைத்த அத்தோழியின் கட்டுக்கதை யினைக் கூறுகிறது இச்செய்யுள்:

திருந்துஇழாய்! கேளாய், நம் ஊர்க்கெல்லாம் சாலும் பெருநகை அல்கல் நிகழ்ந்தது ஒருநிலையே; மன்பதை எல்லாம் மடிந்த இருங் கங்குல், அந்துகில் போர்வை அணிபெறத் தைஇ; நம் இன்சாயல் மார்பன் குறிநின்றேன் யானாகத் 5 'திரத் தறைந்த தலையும் தன் கம்பலும், காரக்குறைந்து, கறைப்பட்டு வந்துநம் சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானைத் தோழி! நீபோற்றுதி!' என்றி, அவன் ஆங்கே பாராக் குறழாப், பணியாப் பொழுதன்றி 10 யார்இவண் நின்றீர்? எனக்கூறிப் பையென. வைகாண் முதுபகட்டில் பக்கத்திற் போகாது,