பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 23

ஆனால், தோழியின் நிலையோ அத்தகையதன்று. அப் பெண்ணின் துயர்க் கொடுமையினை உடனிருந்து காண்பவள் அவள். அதனால், இவ்வாறு துயருறுவதை அப்பெண் மேலும் பொறாள். இந்நிலை நீடிப்பின் அவள் @ಕಿ படுதலும் கூடும் என அஞ்சினாள். ஆகவே, அதற்கு ஒரு வழி காண வேண்டும். அவன் அவளை என்றும் பிரியாதிருத்தல் வேண்டும். அதைப் பெற்றோர் அறியாத வாறு மேற்கொள்ளுதல் இயலாது. ஆகவே, அவன் அவளை விரைவில் மணம் செய்து கொள்ளுதல் வேண்டும். அதற்காம் வழி வகைகளை மேற்கொள்வது தன் கடன் எனத் துணிந்தாள். அவ்வாறு துணிந்த அவள், அப் பெண்ணின் துயர் நிலையினை எடுத்துக் கூறி, மனத்திற்காம் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவனைத் தூண்டவே, அவள் ஆங்கு நின்று கொண்டிருந் தாள.

வழக்கம் போலவே வந்து, காதலியைக் கண்டு அளவளாவி மகிழ்ந்து மீள்வான், தோழியை ஆங்குக் கண் டான்; அவள்பால் சென்றான். வந்து தன் முன் நிற்கும் அவனை, அன்ப! என் தோழி நின் துணைவி, இப்போது எவ்வாறு உள்ளாள்? அவள் நிலையில் யாதேனும் குறை யிருப்பக் கண்டனையோ? என வினவினாள். அவன் அவள்பால் யாதொரு குறையும் கண்டிலன். மாறாக அவனைக் கண்ட மகிழ்ச்சி, அவள் மனதில் நிறைந்து நிற்பதால், அவள் மிக்க தோற்றப் பொலிவோடு தோன்று வதையே கண்டுவந்தான்். ஆதலின், "அவள் நிலை நனிமிக நன்று : பருவமழை பொய்யாது பெய்யப் பெற்ற பயிரே போலவும், தன்பால் வந்து இரப்பார்க்கு இல்லை