பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 புலவர் கா. கோவிந்தன்

யென்னாது வழங்கும் அருள் உள்ளம் உடையான்பால், குறைவுறாது மண்டிக் கிடக்கும் செல்வத்தைப் போலவும், ஒரு தொழிலைத் தொடங்குவதன் முன்னர், அதைக் குறை வற முடிக்கவல்ல வழிவகைகளைப் பலகாலும் ஆராய்ந்து அறிந்து, அதற்கு வேண்டும் கருவிகளோடு தொடங்கி முடிக்கும் திண்ணிய உள்ளம் உடையான்பால், அவன் எண்ணிய எண்ணியாங்கே சென்று சேரும் செல்வம் போலவும், சிறந்து விளங்குகிறாள் அவள். அவளுக்கு யாதொரு குறையும் இல்லை!" என்றான்.

அது கேட்ட தோழி, "ஐய! நீ அப்பெண்ணின்பால் கண்ட காட்சி, நீ காணும்போது அத்தகையதே என்பதை யானும் அறிவேன். ஆனால் அவள் எப்போதும் அந்நிலை யினள் அல்லள். அவள் உன்னைக் காணாதபோது அவளிருக்கும் நிலையினையும் கூறுகிறேன், கேள். நீர் குறைவறப் பெற்ற நிலங்களை மட்டுமே கண்டவன் நீ. நீர் பெறாது வாடிய நிலத்தினை நீ கண்டிருக்க மாட்டாய். அந்நிலம், எவ்வாறு அழகும் ஆக்கமும் கெட்டுக் கிடக்குமோ, அதைப் போலவும், செல்வ வாழ்வில் சிறந்து விளங்குபவன் நீ ஆதலின், கையில் காசு இல்லாமல் கண்ணிர் விடும் இளைஞனின் கொடுமையினை அறிந்திருக்க மாட்டாய், காசு இல்லாமையால் இன்பம் தராது கொன்னேகழியும் அவன் இளமையைப் போலவும், நிறை பொருளுடைமையால் நல்லறம் பல செய்து பழகிய நீ, அறம் செய்யாதான்் ஒருவனையும், அறம் செய்யா மையால், அவன் வாழ்நாள் பயனின்றிக் கழிவதையும், அவ்வாறு பயனின்றியே தன் வாழ்நாளைக் கழித்துவிட்டு, முதுமை எய்திய ஒருவனையும், அந்நிலையில், அறம்