பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 25

செய்திலமே என்ற நினைவால் அவன் வருந்தும் நிலை யினையும் அறியாய்; பிறந்ததன் பயனைப் பெறாதே வந்துற்ற அவன் முதுமை போலவும், அழகும் ஆக்கமும் இழந்து காட்சி தருகிறாள் நின் காதலி.

"ஆனால், நீ வரக்கண்டவுடனே, அவள் அவ்வழிவுக் காட்சிகள் மறைய, அழகு பெற்று விடுகிறாளாதலின், அவள் தளர்நிலையினை நீ கண்டிலை. ஆனால், அவளுட னிருந்து பழகும் எனக்கன்றோ தெரியும், அவள், தின்னைப் பெறாமையாலும், நீ வரும் வழியின் ஏதங்கண்டஞ்சுவ தாலும், எத்துணைத் துயர் உறுகிறாள் என்பது. அவளை இந்நிலையில் நெடுநாள் வைத்திருத்தல் ஆகாது. துயர் மிகுதியால், அவள் இறந்துபடுதலும் கூடும். அது மட்டு மன்று. நீ வாராக்கால் வருந்தி, வந்தக்கால் மகிழ்ந்து கிடப் பதால், அவள் உடல்நிலை தளர்வதையும் வளர்வதையும் மாறி மாறிக் கொள்கிறது. அது கண்டு அண்டை அயலில் உள்ளவர் கூறும் பழிச்சொற்களைக் கேட்கவும் பொறுக்க வில்லை. ஆகவே, அவள் தளர்ச்சி ஒழியவும், அவள் அழகு அழியாது நிலைக்கவும், அயலார் கூறும் அலர் உரை கெடவும் வழி செய்ய வேண்டுவது நின் கடன். அதற்கு வழி அவளை வரைந்து கொண்டு பிரிவறியாப் பெருவாழ்வு பெறுதலல்லது பிறிது இல்லை. ஆகவே, இக்களவொழுக்கத்தைக் கைவிட்டுக் கடிமணம் புரிந்து கொள்வாயாக. அல்லது, அதற்கு வேறு வழி உண்டேல், அதை உரைத்துச் செல்வாயாக!” என்றாள்.

அவள் கூறிய சொற்கள், தன் களவொழுக்க இன்பத் திற்கு ஊறுவிளைவிப்பதறிந்து, இளைஞன் உள்ளம் சிறிதே கலங்கிற்று. அதைக்குறிப்பால் உணர்ந்து கொண்ட தோழி,