பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி & 27

தோழி கூறுவதில் உண்மை யிருப்பதைக் கண்ட அவ்விளைஞன் மணத்திற்கு இசைந்தான்். “நல்ல நாளில் அவளை மணந்து கொள்வேன். அதற்காம் முயற்சியினை இன்றே மேற்கொள்வேன். இனிக்கவலை ஒழிக!” என உறுதி கூறிச் சென்றான். அவன் உரை கேட்டாள் தோழி. மகிழ்ச்சி வெள்.ாம் கரை புரண்டது. ஓடினாள் அப் பெண்ணிடம். "நின் காதலன், உங்கள் மணவினைக்காம் முயற்சியினை மேற்கொண்டு விட்டான். அதற்கேற்ற நன்னாளை எதிர்நோக்கி நிற்கிறான். வேங்கை மலரும் நாள் நன்னாள் என, நம்மவர் கருதுவர். ஆகவே, அவன் அவ் வேங்கை மலரும் நாளை எதிர்நோக்கியுள்ளான்!” என்று கூறி, அதுகேட்டு, அவள் மகிழ்வது கண்டு, தான்ும் மகிழ்ந்து மன அமைதி பெற்றாள். வாழ்க அத்தோழி!

அத் தோழி நல்லாளை நமக்கு அறிமுகம் ஆக்கும் செய்யுள் இதோ:

"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன், உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக ஐயிரு தலையின் அரக்கர் கோமான், தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை எடுக்கல் செல்லாது உழைப்பவன் போல 5

உறுபுலி உருவேய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவுகொண்டு அதன்முதல் குத்திய மதயானை, நீடிரு விடரகம் சிலம்பக் கூய்த் தன் கோடு புய்க்கல்லாது உழக்கும் நாட! கேள்; ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால் 10